Automobile Tamilan

4×4 உடன் டாடா ஹாரியர்.இவி ஜனவரி 2025-ல் அறிமுகம்..!

tata harrier ev launch on 2025

டாடா மோட்டார்ஸ் அடுத்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ஹாரியர்.EV மாடல் ஆனது வருகின்ற ஜனவரி 2025-ல் உற்பத்தி நிலை மாடல் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அநேகமாக 2025 மார்ச் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடாவின் முதல் ஆல் வீல் டிரைவ் அல்லது 4×4 பெறுகின்ற எலெக்ட்ரிக் மாடலாக வரவுள்ள இந்த மாடலை பொருத்தவரை மிக சவாலான விலையில் அமையக்கூடும். மேலும், அதே நேரத்தில் ஏற்கனவே இந்நிறுவனம் 6 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஹாரியர்.இவி காரினை ATLAS (Adaptive Tech Forward Lifestyle Architecture) பிளாட்ஃபாரத்தில் குறைந்தபட்சம் 450 கிமீ ரேஞ்ச் முதல் அதிகபட்சமாக 600 கிமீ ரேஞ்ச் வரை வெளிப்படுத்தக்கூடியதாக அமையலாம்.

வழக்கமான டிரைவிங் மோடுகளுடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையிலான Snow, Gravel, Sand போன்றவற்றில் பயணிக்கின்ற வகையிலான 4×4 டெர்ரெயின் மோடுகள் இடம்பெற்றிருக்கும்.

வருகின்ற ஜனவரி 17 முதல் 22 வரை டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2025ல் அதாவது இனி பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடல் வெளியிடப்பட்டு விற்பனைக்கு முதல் காலாண்டில் கிடைக்கலாம். இந்த மாடலுக்கு போட்டியாக மஹிந்திரா XEV 9e , BE 6e உள்ளிட்ட மாடல்களுடன் மற்ற காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார்களும் அமைந்திருக்கலாம்.

Exit mobile version