Automobile Tamilan

10வது ஆண்டு க்விட் சிறப்பு எடிசனை வெளியிட்ட ரெனால்ட்

Renault-Kwid-10th-Anniversary-Edition

ரெனால்ட் இந்தியாவில் பட்ஜெட் விலை மடாலாக ஆல்டோ காருக்கு சவால் விடுக்கும் க்விட் காரை வெளியிட்டு வெற்றிகரமான 10 ஆண்டுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் க்விட் ஆனிவர்ஷரி எடிசனை ரூ.5.14 லட்சம் முதல் ரூ.5.66 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலையை நிர்ணயம் செய்துள்ளது.

Renault Kwid Anniversary Edition

சிறப்பு எடிசன் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும் மொத்தமாக 500 யூனிட்டுகள் மட்டும் கிடைக்க உள்ளது.டூயல் டோன் நிறத்திற்கு ஏற்ப கருப்பு நிற மேற்கூறையுடன் சிவப்பு மற்றும் கிரே என இரண்டு நிறத்தை பெற்ற பல்வேறு இடங்களில் மஸ்டர்டூ மஞ்சள் நிற ஸ்டிக்கரிங் சேர்க்கப்பட்டு 10வது ஆண்டு பேட்ஜிங், ஒளிரும் ஸ்கஃப் பிளேட் மற்றும் படெல் விளக்குகளை வழங்கியுள்ளது.

புதிய ஜிஎஸ்டி 2.0 வரி முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் தற்பொழுது ரெனால்ட் க்விட் விலை ரூ.4,29 லட்சம் முதல் ரூ.5.99 லட்சம் வரை கிடைக்கின்றது.

மேலும் சமீபத்திய முக்கிய மாற்றமான ரெனால்ட் இந்தியாவின் வேரியண்ட் பெயர் மாற்றத்தின் படி, தற்பொழுது க்விடில் Authentic, Evolution, Techno என மாற்றப்பட்டுள்ள நிலையில், Climber டாப் வேரியண்ட் தொடர்ந்து அதே பெயரில் வந்தாலும் கூடுதல் பாதுகாப்பாக 6 ஏர்பேக்குகளை பெற்றிருக்கின்றது.

மற்ற வேரியண்டுகள் தொடர்ந்து இரண்டு ஏர்பேக்குகளுடன், அனைத்து வேரியண்டில் 3 புள்ளி சீட் பெல்ட் இடம்பெற்றுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 67hp மற்றும் 91Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உள்ளது.

Exit mobile version