Automobile Tamilan

இந்தியாவில் ஸ்கோடா என்யாக் iV எலக்ட்ரிக் அறிமுகம்

skoda enyaq iv

ஸ்கோடா ஆட்டோ இந்தியா வெளியிட உள்ள முதல் என்யாக் iV (Skoda Enyaq) எலக்ட்ரிக் எஸ்யூவி 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவில் வெளியிடப்பட்டு பல்வேறு முக்கிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய சாலைகளில் சோதனை ஓட்டடத்தில் ஈடுபட்டு  வந்த என்யாக் படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Skoda Enyaq iV

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எலக்ட்ரிக் MEB பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கோடா என்யாக் iV காரின் 4,648 மிமீ நீளமும் 1,877 மிமீ அகலமும் கொண்டுள்ளது. இந்திய சந்தைக்கு முதற்கட்டமாக CBU முறையில் விற்பனைக்கு வரவுள்ள என்யாக் 80x காரில் 77kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு AWD போல இரு பக்க ஆக்சிலிலும் ஒரு மோட்டார் இடம்பெற்று 265hp பவர் வழங்குகின்றது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 513km (WLTP) ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 125kW DC விரைவு சார்ஜரை ஆதரிக்கும்.

ஸ்கோடாவின் பாரம்பரிய கிரில் பகுதியில் ஒளிரும் வகையில் அமைந்திருப்பதுடன் ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப், பம்பரில் கருப்பு நிற இன்ஷர்ட், ஏரோ வடிவத்தை பெற்ற அலாய் வீல், எல்இடி டெயில்கேட் லைட் கொண்டதாக அமைந்துள்ளது. இன்டிரியரில் ADAS  பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா, இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இந்தியாவில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஸ்கோடா என்யாக iV விலை ரூ.70 லட்சத்தில் வரக்கூடும்.

Exit mobile version