Automobile Tamilan

இன்று கைலாக் எஸ்யூவியை வெளியிடும் ஸ்கோடா இந்தியா

Skoda Kylaq launch today

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் புதிய கைலாக் (Kylaq) காம்பேக்ட் எஸ்யூவி காரின் அறிமுகத்தை இன்று மேற்கொள்ள உள்ளது. விற்பனைக்கு ஜனவரி 2025 இல் பாரத் மொபிலிட்டி ஷோவில் மூலம் அறிமுகம் செய்ய உள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்ற MQB A0 IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஏற்கனவே ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா மற்றும் குஷாக், அதேபோல ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டஸ் மற்றும் டைகன் போன்ற மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாக் மாடலின் 4 மீட்டருக்கு குறைவாக அமைந்துள்ளதால் மிக கடுமையான போட்டியாளர்களை இந்திய சந்தையில் எதிர்கொள்ளுகின்றது.

தற்பொழுது வரை வெளிவந்த விபரங்களின் படி ஒற்றை 115 PS மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்தும் 999சிசி டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனிலும் கிடைக்க உள்ளது.

3,995மிமீ நீளம், 2,566மிமீ வீல்பேஸ், மற்றும் 189மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ள காரில் 17 அங்குல டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல் பெற்றுள்ளது.

ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற கைலாக் எஸ்யூவி இன்றைக்கு வெளியாக உள்ளது. மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் சர்வதேச அளவில் டெர்ரா என்ற பெயரை பயன்படுத்த உள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு ஃபோக்ஸ்வேகன் அறிமுகத்தை உறுதி செய்யவில்லை.

 

Exit mobile version