ஸ்கோடா ஸ்லாவியா & குஷாக் எஸ்யூவி சிறப்பு எடிசன் அறிமுகம்

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் ஸ்லாவியா செடான் மாடலில் வருடாந்திர பதிப்பு மற்றும் குஷாக் எஸ்யூவி காரில் லாவா ப்ளூ எடிசன் என இரண்டு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குஷாக் லாவா ப்ளூ என இரண்டு கார்கள் சிறப்பு பதிப்புகளாகும். வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சிறிய மாற்றங்களுடன் வருகின்றன. குஷாக் லாவா ப்ளூ எடிசன் மற்றும் குஷாக் ஸ்டைல் மற்றும் மான்டே கார்லோ வேரியண்டுகளுக்கு இடையில் வந்துள்ளது. ஸ்லாவியா ஆனிவெர்சரி எடிசன் டாப் லைன் ஸ்டைல் வேரியண்டிற்கு மேல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளி தோற்றத்தில் கதவுகளின் கீழ் பகுதியில் குரோம் கார்னிஷ் மற்றும் ஸ்லாவியாவில் ‘ஆனிவர்சரி எடிஷன்’ பேட்ஜ் பெற்ற டிரங்க் மற்றும் குஷாக் பி-பில்லரில் ‘எடிசன்’ பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியரில், ஸ்கோடா ப்ளே ஆப்ஸ் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட் லிங்க் இணைப்பினை ஏற்படுத்தும் வகையில் 10 அங்குல ஸ்கோடா இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகியவை MQB-A0-IN பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டு இரண்டு மாடல்களும் 1.5 லிட்டர் TSI நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 147.5 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்றது. E20 எத்தனால் எரிபொருள் மற்றும் RDE உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றது. இந்த காரில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

Variant 1.5 TSI MT 1.5 TSI AT
Skoda Slavia Anniversary Edition ₹ 17,27,999 ₹ 18,67,999
Skoda Kushaq Lava Blue Edition ₹ 17,99,000 ₹ 19,19,000

Share