புதிய டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் வெளியானது

Tata Altroz

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பீரிமியம் ஹேட்ச்பேக் ரக மாடலாக டாடா அல்ட்ரோஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வரவுள்ள இந்த காஃ ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை பெற்ற அல்ட்ரோஸ் காரின் வடிவமைப்பு இம்பேக்ட் 2.0 அடிப்படையில் உருவாக்கப்பட்டு முதன்முறையாக புதிய ALFA (Agile, Light, Flexible and Advanced) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். ஹெட்லைட் அமைப்பு மற்றும் கிரில் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்பாடினை கொண்டுள்ளது. பக்கவாட்டில் அமைந்துள்ள வளைவான லைன்கள் மற்றும் பின்புறத்தில் உள்ள கருமை நிறம் காருக்கு கூடுதல் கவர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.

உட்புறத்தில், பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலில் ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மாடல் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவுடன் வந்துள்ளது. ஆல்ட்ரோஸ் மாடலில் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் புத்தம் புதிய ஸ்டீயரிங் ஆகியவற்றுடன் உள்ளது.

அல்ட்ரோஸ் என்ஜின்

பெட்ரோல் மற்றும் டீசல் என இண்டிலும் வெளியாக உள்ள இந்த காரில் முதற்கட்டமாக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ரோஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுக்கு ஏஎம்டி கியர்பாக்ஸ் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும். இரண்டு என்ஜின்களும் ஈக்கோ மற்றும் சிட்டி டிரைவிங் மோடுகளுடன் வழங்கப்படுகின்றன. டீசல் ஆல்ட்ரோஸ் 1150 கிலோ எடையையும், பெட்ரோல் பதிப்பு 1036 கிலோ எடையும் கொண்டுள்ளது.

டாடா அல்ட்ரோஸ் 3990 மிமீ நீளம், 1755 மிமீ அகலம், 1523 மிமீ உயரம் மற்றும் 2501 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இது 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது. எரிபொருள் டேங்க் 37 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. 185/60 R16 (பெட்ரோல்) மற்றும் 195/55 R16 டயமண்ட் கட் அலாய் வீல் கொண்டுள்ளது.

இதன் அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி உடன் வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.

குறிப்பாக தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, என்ஜின் புஷ் பொத்தான் ஸ்டார்ட் / ஸ்டாப், ஸ்மார்ட் கீ, எலெக்ட்ரிக் முறையில் மடிக்கக்கூடிய ORVM, முன் மற்றும் பின்புறத்தில் வேகமாக சார்ஜ் செய்யும் போர்ட், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், மழை உணர்திறன் வைப்பர், 90 டிகிரி திறக்கும் கதவுகள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பின்புற இருக்கை ஆர்ம்ரெஸ்ட், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், 15 லிட்டர் குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ் போன்ற பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது.

 

அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது. அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளது. நாளை முதல் ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஜனவரி 2020-ல் விலை அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் படிங்க – டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி விபரம்

 

Exit mobile version