Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் கர்வ் & கர்வ்.இவி அறிமுகமானது

tata curvv ev suv side

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி மாடல் ஆன கர்வ் மற்றும் கர்வ்.ev என இரண்டு மாடல்களும் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனைக்கு இந்த இரண்டு மாடல்களும் ஆகஸ்ட் 7ஆம் தேதி விலை அறிவிக்கப்பட இருக்கின்றது.

2023 ஆம் ஆண்டு கூபே ஸ்டைலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கான்செப்ட் நிலை மாடல் தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டி இருக்கின்றது.

Tata Curvv.ev and Curvv

குறிப்பாக கர்வ் மற்றும் கர்வ்.இவி என இரண்டு மாடலுக்கு மிக முக்கியமாக முக்கோண வடிவ எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளளது முன்புற தோற்ற அமைப்பு மற்றும் கிரிலில் மட்டும் வித்தியாசங்கள் பெரிதாக தெரிகின்றது. பக்கவாட்டில் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் கூட அலாய் மற்றும் வீல் ஆர்சில் மாற்றங்கள் உள்ளன.

பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள டயர் லைட்டில் பெரிதாக மாற்றமில்லை மேலும் பம்பர் உள்ளிட்டவற்றிலும் பெரிதாக மாற்றம் இல்லாமல் இரண்டு மாடல்களும் ஒரே மாதிரி அமைந்துள்ளன.

இன்டீரியர் தொடர்பான எந்த ஒரு படங்களும் தற்பொழுது வெளியிடவில்லை மேலும் எவ்விதமான நுட்ப விபரங்களும் தற்பொழுது அறிவிக்கப்பட்ட வில்லை.

 Acti-EV அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தின்  தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கின்றது. இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD  என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய 125hp பவர், 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. மேலும் நெக்ஸானிலிருந்து 115 hp, 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினையும் பெறக்கூடும்.

Exit mobile version