• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.12.69 லட்சத்தில் டாடா ஹேரியர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

by MR.Durai
23 January 2019, 1:28 pm
in Car News
0
ShareTweetSend

8aba9 tata harrier launched

இந்தியாவின் மிக நேர்த்தியான டிசைன் பெற்ற டாடா ஹேரியர் எஸ்யூவி ரூ.12.69 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.  140hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற்றிருக்கும்.

டாடா ஹேரியர் எஸ்யூவி

மிக நேர்த்தியான வடிவத்தை பெற்ற ஹேரியர் எஸ்யூவி காரில், பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய இன்டிகேட்டர், ஸனான் HID புராஜெக்டர் முகப்பு விளக்குகள், மிதிக்கும் வகையிலான தோற்றத்தை வெளிப்படுத்தும்  மேற்கூறை, க்ரோம் பூச்சூ போன்றவற்றுடன் எல்இடி டெயில் விளக்கை பெற்றுள்ளது.

இந்த ஹேரியர் எஸ்யூவி மாடல் 4,598mm நீளத்தை பெற்ற இந்த எஸ்யூவி மாடலின் அகலம் 1,894mm , 1,706mm உயரம் மற்றும் 2,741mm வீல்பேஸ் கொண்ட இந்த மாடல் தாரளமான இடவசதியை கொண்டிருக்கின்றது.

140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.  லேண்ட் ரோவர் மாடல்களில் இடம்பெற்றுள்ள டெரெயின் ரெஸ்பான்ஸ் கன்ட்ரோலர் மல்டி மோட் (நார்மல், வெட், மற்றும் ரஃப்) மற்றும் டாடா மல்டி டிரைவ் (ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்) போன்றவற்றை கொண்டதாக வந்துள்ளது.

XE, XM, XT மற்றும் XZ என நான்கு வேரியன்ட்டுகளில் ஹேரியர் வந்துள்ளது. இதன் டாப் வேரியன்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. 5 இருக்கைகளை பெற்ற இந்த எஸ்யூவி மாடலில் ஜேபிஎல் ஸ்பிக்கர்கள், ரிவர்ஸ் கேமரா , ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் போன்றவற்றை கொண்டுள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக 6 ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், ரெனோ கேப்டூர், வரவுள்ள நிசான் கிக்ஸ், மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களை எதிர்க்கும் திறனுடன் டாடா ஹேரியர் எஸ்யூவி விளங்குகின்றது.

டாடா ஹேரியர் விலை பட்டியல்

ஹேரியர் XE – ரூ.12.69 லட்சம்

ஹேரியர் XM – ரூ. 13.75 லட்சம்

ஹேரியர் XT – ரூ. 14.95 லட்சம்

ஹேயரியர் XZ – ரூ. 16.25 லட்சம்

(விற்பனையக விலை மும்பை)

Tags: Tata HarrierTata Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version