
டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டிலும் 1.5 லிட்டர் ஹைப்பர்ஐயன் டர்போ பெட்ரோல் என்ஜின் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு விரைவில் வெளியிடப்பட உள்ளது. முன்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியரா மாடலின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.
Tata Harrier, Safari Petrol launch soon
சியரா உட்பட தற்பொழுது வரவுள்ள பெட்ரோல் வகை சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டிலும் பிரத்யேகமாக Hyperion 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் (TGDi) என்ஜினை 160hp -170hp பவர் ஆனது 5,000rpm மற்றும் 255Nm டார்க் ஆனது 2,000-3,500rpmல் வழங்கலாம் இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றிருக்கலாம்.
டீசலில் கிடைக்கின்ற இரு மாடல்களும் தற்பொழுது சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்தாலும், கூடுதலாக பெட்ரோல் அறிமுகப்படுத்தும் பொழுது கூடுதலான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக விற்பனைக்கு வரும் பொழுது புதிய ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்கள் விலை ரூ.13 லட்சத்த்துக்கும் சற்று கூடுதலாக துவங்க வாய்ப்புள்ளது.