குறைந்த விலையில் டாடா பஞ்ச்.இவி எலகட்ரிக் அறிமுக விபரம்

punch icng

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பஞ்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான்.இவி அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் புதிய பஞ்ச் குறைந்த விலையில் வரவுள்ளது.

Tata Punch.ev

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள சிட்ரோன் eC3 எஸ்யூவி மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் காம்பேக்ட் எஸ்யூவி ஆக வரவுள்ள ஜிப்ட்ரான் டெக்னாலாஜி பெற்ற மாடலாக பஞ்ச் வரவுள்ளது.

ALFA பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள முதல் மாடலான பஞ்ச் எலக்ட்ரிக் காரில் அனேகமாக 24 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 315Km/charge மற்றும் 19.2 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 250Km/charge ஆக இரண்டு ஆப்ஷனை பெறக்கூடும். ஆனால் எந்தவொரு பேட்டரி பேக் ஆப்ஷனையும் தற்பொழுது வரை டாடா மோட்டார்ஸ் உறுதிப்படுத்தவில்லை.

ரூ.10 லட்சம் விலையில் டாடா மோட்டார்ஸ் பஞ்ச் எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Source: Autocar India