Site icon Automobile Tamilan

பஸ் வேர்ல்ட் இந்தியா 2018-ல் 5 புதிய வாகனங்களை காட்சி படுத்தியது டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், பஸ் வேர்ல்ட் இந்தியா 2018-ல் 5 புதிய வாகனங்களை காட்சிபடுத்தியுள்ளது.

ஸ்டார்பஸ் அல்ட்ரா ஏசி 22-சீட்டர் புஷ்பேக், ஸ்டார்பஸ் 22-சீட்டர் ஏசி மேகசி கேப், விஞ்சேர் 12-சீட்டர், டாடா 1515 MCV ஸ்டாப் பஸ் மற்றும் MAGNA இன்டர்சிட்டி கோச் ஆகிய ஐந்து மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

பஸ் வேர்ல்ட் இந்தியா 2018 என்பது உலகளவில் மிகபெரிய B2B பஸ் மற்றும் கோச் கண்காட்சியாகும். இந்த வாகனங்கள் அனைத்தும், ஸ்டேட் ஆப் தி ஆர்ட் டெக்னாலஜி மற்றும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. இந்த பஸ்கள் சிறந்த எர்பொருள் சிக்கனத்துடனும், நீண்ட காலம் சர்விஸ் செய்யாமல் ஓடும் திறனை கொண்டது.

இந்தியாவில் முதல் முறையாக பஸ் பாடி கம்ப்ளைன்ட் ஆடம்பர இன்டர்சிட்டி பஸ்களாக உருவாக்கப்பட்டுல் இந்த பஸ்கள் 180bhp மற்றும் 230bhp என இரண்டு ஆற்றலுடன் வெளிவர உள்ளது. புதிய தலைமுறை கோச் கொண்ட இந்த பஸ்களின் சீட் எண்ணிக்கை 35-44 ஆகவும், இருக்கையில் அமரும் பயணிகள் கால் வைக்கும் இடத்தின் அளவு 7.5 கியூபிக் மீட்டர் கொண்டதாகவும் இருக்கும். மேக்னா இன்டர்சிட்டி பஸ்கள் கம்மிஸ் ISBe 5.9 இன்ஜின், டாட்டா G750 கியர்பாக்ஸ், வினோத் ரீடர்டர் மற்றும் மார்காபோலோ பஸ் பாடி ஆகியவைகளுடன் உருவாகப்பட்டுள்ளது.

ஸ்டார்பஸ் அல்ட்ரா ஏசி 22 சீட்களுடன் புஷ்பேக் மற்றும் ஸ்டார்பஸ் 12-சீட்களுடன் ஏசி மேகசி கேப், இரண்டும், டாட்டா மார்கோபோலோ-வால் தயாரிக்கப்படுகிறது. இதில் தனிநபர்களுக்கான சார்ஜிங் பாயின்ட்கள், அனைத்து சீட்களிலும் ஹாண்ட்ரெஸ்ட், புஷ்பேக் செய்யும் ஆடம்பர லெதர் சீட்கள், பவர் ஸ்டீயரிங், ஏர் பிரேக் மற்றும் LED லைட்கள் இடம் பெற்றுள்ளன.

ஸ்டார்பஸ் அல்ட்ரா ஏசி 22 சீட்களுடன் புஷ்பேக் பஸ்கள் புதிய தலைமுறை டர்போத்ரோன் இன்ஜின்களுடன் 140bhp மற்றும் 7 லட்சம் கிலோமீட்டர் முதல் சர்வீஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

டாட்டா ஸ்டார்பஸ் 12 சீட் கொண்ட ஏசி மேகசி கேப் பஸ்கள், 4SP CR இன்ஜின்களுடன் GB-550 கியர்பாக்ஸ்களுடன் ஒருகிணைக்கப்பட்ட கேபிள் மெக்கானிசம், ரேடியல் டுயுப்லெஸ் டயர்கள், பாராபோலிக் சஸ்பென்ஷன் மற்றும் டில்டேபிள் ஸ்டியரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.

டாட்டா விஞ்சேர் 12- சீட் கோணத் பஸ்கள், டூர் மற்றும் டிராவல் ஆபரேட்டர்க்ளுக்காவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2.2L DICOR இன்ஜின் கொண்டது. இந்த இன்ஜின்கள் மூலம் சபாரி எஸ்யூவி ஆற்றலை பெறலாம்.

கடைசியாக, டாட்டா MCV ஸ்டாப் பஸ்கள், அடிப்படையில் 1515 சேஸ்களைகொண்டுள்ளது. கம்மிஸ் ISBe 5.9 இன்ஜின், G600 கியர்பாக்ஸ் மற்றும் டாட்டா மார்கோபோலோ பாடியை கொண்டுள்ளது. மேலும் இதில் 2 பாயிண்ட் சீட் பெல்ட், ரிவர்ஸ் காமிரா டிஸ்பிளே, USB மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் வை-பை உடன் கூடிய GPS ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.

Exit mobile version