Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
பயணிகள் வாகனங்களுக்கு புதிய துணை நிறுவனத்தை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்

பயணிகள் வாகனங்களுக்கு புதிய துணை நிறுவனத்தை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்

டாடா சியரா

பயணிகள் வாகனம் உட்பட எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் என ஒரு புதிய துனை நிறுவனத்தை உருவாக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டாடாவின் பயணிகள் வாகன சந்தையின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், டாடா டிகோர், டியாகோ, நெக்ஸான் , ஹாரியர் மற்றும் அல்ட்ராஸ் போன்றவை அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், வரவுள்ள ஹெச்பிஎக்‌ஸ் மினி எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகள் வாகனப் பிரிவில் கடுமையாக அமலுக்கு வரும் மாசு உமிழ்வு , எலக்ட்ரிக் வாகனங்கள், ஆட்டோமேட்டிக் வாகனம் மற்றும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்களிலிருந்து மேம்பட்ட வடிவங்களில் விரைவான மாற்றத்தைக் காண்கிறது. இந்தியா தொடர்ந்து ஒரு கவர்ச்சிகரமான சந்தையாக விளங்குகின்றது. எனவே, சவாலினை எதிர்கொள்ளும் நிலையில் புதிய துனை நிறுவனத்தை உருவாக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

டாடாவின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவராக மாயங்க் பாரீக் செயல்பட்டு வந்த நிலையில், அவர் பதவிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக ஷைலேஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயணிகள் வாகனங்கள் பிரிவுக்கான தலைவராக செயல்பட உள்ளார்.

 

Exit mobile version