Automobile Tamilan

ADAS பாதுகாப்பினை பெற்ற டாடா நெக்ஸான் விற்பனைக்கு வெளியானது

nexon adas

டாப் Fearless +PS வேரியண்டின் அடிப்படையிலான டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பெற்ற நெக்ஸான் வேரியண்டில் மட்டும் ரூ.13.53 லட்சம் ஆகவும், ரெட் டார்க் எடிசனில் ரூ.13.81 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

கூடுதலாக, ரெட் டார்க் எடிசனில் சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் 5 விதமான வேரியண்டுகள் கிடைக்கின்றது.

Tata Nexon ADAS

இந்திய சந்தையின் மிகவும் பிரசத்தி பெற்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடலான நெக்ஸானில் உள்ள லெவல் 2 ADAS தொகுப்பு, முன்னோக்கி மோதல் எச்சரிக்கை, தன்னியக்க அவசரகால பிரேக்கிங், லேன் புறப்பாடு எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்ட், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் போக்குவரத்து அடையாள அங்கீகாரம் போன்ற செயலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

மற்றபடி, வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லா நிலையில் Red Dark ஆனது தற்பொழுது ரூ.12.44 லட்சம் முதல் ரூ.14.15 லட்சம் வரை மேனுவல், ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

Tata Nexon புதிய வேரியன்ட்கள் விலை விவரம்

Persona விலை ₹ (லட்சம்)
Fearless +PS DCA ADAS ₹ 13.53 லட்சம்
பதிப்பு – Red #DARK விலை ₹ (லட்சம்)
Petrol MT ₹ 12.44 லட்சம்
Petrol DCA with ADAS ₹ 13.81 லட்சம்
CNG MT ₹ 13.36 லட்சம்
Diesel MT ₹ 13.52 லட்சம்
Diesel AMT ₹ 14.15 லட்சம்

 

Exit mobile version