ரூ‌13.99 லட்சத்தில் டாடா நெக்ஸான்.இவி 45Kwh பேட்டரியுடன் அறிமுகம்

tata nexon ev red dark edition

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி காரில் முந்தைய 40.5Kwh பேட்டரிக்கு பதிலாக தற்பொழுது 45kwh பேட்டரியை வழங்கி ரூ.13.99 லட்சம் முதல் ரூ. 16.99 லட்சம் வரை விலை கொண்டிருக்கின்றது. கூடுதலாக Empowered 45+ வேரியண்டின் அடிப்படையில் ரூ.20,000 செலுத்தி Red #Dark எடிசன் பெற்றுக் கொள்ளலாம்.

சமீபத்தில் வெளியான கர்வ்.இவி மாடலில் இடம்பெற்று இருப்பதைப் போன்ற பிரிஸ்மேட்டிக் செல் (prismatic LFP) கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ள புதிய 45kwh பேட்டரி மூலம் கூடுதலாக 8 % ஆற்றல் அடர்த்தி மற்றும் 15% வால்யூம் மேட்ரிக் அடர்த்தி உள்ளது.

ARAI சோதனை அறிக்கையின் படி, Nexon EV 45 kWh பேட்டரி மாடல் ரேஞ்ச் 489 கிலோமீட்டர் வரை இருக்கும், டாடா வெளியிட்டுள்ள உண்மையான பயணிக்கின்ற ரேஞ்ச் 350 முதல் 370 கிலோமீட்டர் வரை இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. முந்தைய, 40.5 kWh மாடலின்  உண்மையான ரேஞ்ச் 290 முதல் 310 கிமீ ஆகும்.

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 60kWh விரைவு சார்ஜரை பயன்படுத்தி 10-80 % பெறுவதற்கு 40 நிமிடங்கள் போதும் என குறிப்பிடப்படுகின்றது. டாப் எம்பவர்டு பிளஸ் வேரியண்டில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12-லிட்டர் ‘ஃபிரங்க்’ முன்புறத்தில் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

நெக்ஸான்.இவி 45Kwh மாடலில் Creative, Fearless, Empowered மற்றும் Empowered+ என வேரியண்டுகள் உள்ள நிலையில் கார்பன் கருப்பு வெளிப்புற நிறத்தை பெற்றுள்ள Red #Dark எடிசன் மாடலில் ஜெட் பிளாக் 16-இன்ச் அலாய் வீல்களில் கருப்பு நிறம், இன்டிரியரிலும் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சில இடங்களில் சிவப்பு நிறமும், ஹெட்ரெஸ்ட்களில் #Dark பொறிக்கப்பட்ட சிவப்பு அப்ஹோல்ஸ்டரி உள்ளது.

டிஜிட்டல் கிளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, கனெக்ட்டிவ் கார் தொழில்நுட்பம், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஏசி கட்டுப்பாடு மற்றும் முழுமையான எல்இடி விளக்குகள் உள்ளது.

Nexon.ev 45Kwh Price list

(Ex-showroom)

கூடுதலாக நெக்ஸான் டர்போ சிஎன்ஜி மாடல் இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version