Site icon Automobile Tamilan

டியாகோ என்ஆர்ஜி-ஐ அறிமுகம் செய்தது டாட்டா மோட்டார்ஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டாட்டா மோட்டார் நிறுவனம் நேற்று ஹாட்ச்பேக் பெயரிடப்பட்ட தனது முதல் டியாகோ என்ஆர்ஜி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை கார்களில் விலை 5.53 லட்ச ரூபாயாகவும், (பெட்ரோல் கார்கள் இந்த விலை மும்பையில் எக்ஸ் ஷோரூம் விலை) டீசல் வகை கார்களின் விலை 6.38 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்ஆர்ஜி கார்களை தயாரிக்க இரண்டு ஆண்டு எடுத்து கொண்ட டாட்டா நிறுவனம், டியோகோவின் பேஸிக் டிசைனில் சில மாற்றங்களை செய்து எஸ்யூவி கிராஸ்ஓவர் லுக் டிசைனில் இதை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள பவர்டிரெயின் (இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்) பெட்ரோல் வகை கார்கள் 1.2 லிட்டர் மற்றும் டீசல் வகைகள் 1.05 லிட்டர் அளவு கொண்டதாக இருக்கும். இவை அதிக ஆற்றலுக்காக பைன்-டூயூன் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி டூயல் டோன் கார் ஸ்கீம், புதிய வீல் ஆர்க்ஸ், முழு பிளாக் இன்டிரீயர், ஆரஞ்சு தையல்கள், ஹர்மன் இண்டகிரெட்டேட் 5-இன்ச் டச் ஸ்கிரீன், 8 ஸ்பீக்கர் சிஸ்டம், ரூஃப் ரெயில்கள், மற்றும் இது கடினமான சாலைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி டூயல் ஏர்பேக்ஸ், வழக்கமான EBD மற்றும் ABS, ரிவர்ஸ் ஹெட்லேம்கள் ஆகியவை முழுமையான பேக்கேஜ்-ஆக கிடைக்கிறது.

டியாகோ என்ஆர்ஜி குறித்து பேசிய மாயங்க் பரேக் பேசுகையில், ஏற்கனவே கடந்த 28 மாதங்களில், 1.7 லட்சம் டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்ட ஹாட்ச்பேக் கார் இதுவாகும். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதுமையான அனுபவத்தை அளிக்கவே நாங்கள் விரும்புகிறோம். .டியாகோ என்ஆர்ஜி இந்த அனுபவத்தை அவர்களுக்கு அளிக்கும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

டாட்டா நிறுவனம் மாதத்திற்கு 1,000 முதல் 1,200 புதிய கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது டியாகோ கார்கள் மாதத்திற்கு 8,000 முதல் 9,000 வரை விற்பனையாகி வருகிறது.

டாட்டா மோட்டார் நிறுவனம், JTP போன்று வடிமைக்கப்பட்ட டியாகோ கார்கள் உள்பட நான்கு தயாரிப்புகளை இந்தாண்டு தீபாவளிக்கு முன்பு வெளியிட்ட உள்ளது. டியாகோ என்ஆர்ஜ-கள் சில்வர், ஆரஞ்சு மற்றும் ஒயிட் என மூன்று கலரில் வெளியாகியுள்ளது.

Exit mobile version