Automobile Tamilan

டாடா டிகோர் காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

டாடா மோட்டார்சின் விற்பனை செய்து வருகின்ற டிகோர் காரில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனில் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் முக்கிய தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் இந்திய சந்தையின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி மாடலை பெற்றதாக டிகோர் மற்றும் டியாகோவில் விற்பனைக்கு வெளியான நிலையில் இரண்டு மாடல்களும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

டாடா டிகோர்

செடான் ரக டிகோர் காரில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களை முன்புறத்தில் பெற்று ஏரோ ஸ்டைல் அம்சங்களை பம்பரை கொண்டுள்ளது. 14 அங்குல ஸ்டீல் வீல் மற்றும் டாப் வேரியண்டில் 14 அங்குல அலாய் வீல் கொண்டுள்ளது.

5 இருக்கைகள் பெற்றுள்ள மாடலின் டாப் வேரியண்டில் டூயல் டோன் கொண்டுள்ள டேஸ்போர்டில் 6.35 செ.மீ டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் 17.78 செ.மீ ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

டிகோரின் என்ஜின்

டாடா டிகோர் செடானில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பெட்ரோல் மாடல் 6000 rpm-ல் 86hp மற்றும் 3300 rpm-ல் 113Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. CNG பயன்முறையில் வரும் பொழுது, 6000 rpm-ல் 77hp மற்றும் 3500 rpm-ல் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் சிறப்பான நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற வகையில் வந்துள்ளது.

டிகோர்.இவி பேட்டரி மற்றும் ரேஞ்ச்

டாடாவின் செடான் ரக டிகோர்.இவி காரில் 26kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 75hp மற்றும் 170Nm வழங்குகின்றது. இந்த டிகோர் இவி மாடல் 5.7 வினாடிகளில் 0 முதல் 60 கிமீ வேகத்தில் செல்லும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிகோர் எலக்ட்ரிக் காரின் ரேஞ்சு 315 கிமீ ஆகும்.

டிகோரில் உள்ள வசதிகள்

35 லிட்டர் கொள்ளளவு பெட்ரோல் மாடல் கொண்டுள்ள நிலையில் சிஎன்ஜி வேரியண்ட் கூடுதலாக 70 லிட்டர் சிஎன்ஜி கொள்ளளவு கொண்டுள்ள டிகோர் காரில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் மற்றும் 4 ட்வீட்டர், எல்இடி ரன்னிங் விளக்குடன் ஆட்டோ ஹெட்லேம்ப், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் கீலெஸ் என்ட்ரியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட்  உள்ளிட்ட அம்சங்களுடன் லெதேரேட் இருக்கைகள் உள்ளது.

டிகோர் போட்டியாளர்கள் மற்றும் விலை

டாடா டிகோர் காருக்கு போட்டியாக மாருதி டிசையர், ஹோண்டா மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய மாடல்கள் கிடைக்கின்றன. டாடா டிகோர் காரின் ஆன் ரோடு விலை ரூ.7.60 லட்சம் முதல் ரூ.10.35 லட்சம் வரையும், டிகோர் சிஎன்ஜி விலை ரூ.9.32 லட்சம் முதல் ரூ. 11.50 லட்சம் வரை கிடைக்கின்றது.

டிகோரின் எலக்ட்ரிக் காரின் ஆன் ரோடு விலை ரூ.13.28 லட்சம் முதல் ரூ.14.51 லட்சம் வரை அமைந்துள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை தோராயமானதாகும்

Exit mobile version