இந்தியாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் வருகை விபரம் வெளியானது

tesla model 3

மின்சார கார்கள் மீதான ஈர்ப்பு பரவலாக அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா மீதான ஆர்வம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஐஐடி மாணவர்களுக்கு கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 452 கிமீ ரேஞ்ச் கொண்ட கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ரூபாய் 25.30 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் எம்ஜி eZS எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியை எலான் மஸ்க் மேற்கொண்ட நிலையில் தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனமும் டெஸ்லா கார்களை தயாரிக்க விருப்பம் தெரிவித்திருந்தது.

கடந்த 21ந் தேதி எலான் மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் X, ஹைப்பர்லூப் சாதனத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தியது. இதில், இந்தியா சார்பில் சென்னை ஐஐடி மாணவர் குழு பங்கேற்ற போது, டெஸ்லா கார்களின் இந்திய வருகை குறித்து எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த, இன்னும் ஓர் ஆண்டிற்குள் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version