Automobile Tamilan

குறைந்த விலையில் ஆட்டோமேட்டிக் கார் வாங்கலாமா ?

குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கார்

நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கார்களில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற குறைந்த விலை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற சிறந்த பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார் மாடல்களின் என்ஜின் (பேட்டரி) விபரம், மைலேஜ், முக்கிய அம்சங்கள் மற்றும் விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

இங்கே தொகுக்கப்பட்டுள்ள பட்டியல் குறைந்த விலை என்பதனை கடந்து பாதுகாப்பு தரத்தையும் மற்றும் வசதிகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை துவங்குவதற்கு முன்பாக நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் சமீபகாலமாக இந்திய வாடிக்கையாளர்கள் ஆரம்ப நிலை பெட்ரோல் ரக கார்களை தவிர்க்கும் விளைவாகவே ஆல்டோ விற்பனை மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த காருக்கு போட்டியாக வந்த க்விட் பெரிய மேம்பாடுகளை இனி பெறாத நிலையில் உள்ளது.

Tata Tiago.ev

பெட்ரோலுக்கு மாற்றாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலக்ட்ரிக் கார்களில் ஒன்றான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற டியாகோ.இவி எலக்ட்ரிக் காரின் ஆன்ரோடு விலை ரூ. 8.45 லட்சம் முதல் ரூ.12.65 லட்சம் வரை கிடைக்கின்றது. 250 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 19.2 kWh மற்றும் 315 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 24 kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.

Renault Kwid

குறைந்த விலையில் ஏஎம்டி எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற இந்தியாவின் மிக விலை குறைந்த காராக விளங்குகின்ற க்விட் ஆன்ரோடு விலை ரூ.6.54 லட்சத்தில் துவங்கி டாப் வேரியண்ட் கிளைம்பர் விலை ரூ. 7.70 லட்சம் வரை உள்ளது. இந்த மாடலில் 67bhp மற்றும் 91Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.0 லிட்டர் என்ஜின் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரவல்லதாகும்.

Maruti Suzuki Alto K10/Celerio

குறைந்த விலை கார்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ உட்பட மூன்று மாடல்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆனது 1.0 லிட்டர் என்ஜினில் 66bhp மற்றும் 89Nm டார்க் வழங்குகின்றது.

Maruti Suzuki WagonR

ஏஎம்டி கியர்பாக்ஸ் பெறுகின்ற மாருதி சுசூகி வேகன் ஆர் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்கின்றது. 1.0 லிட்டர் மாடல் ரூ. 7.69 லட்சத்திலும், 1.2 லிட்டர் மாடல் ரூ. 8.07 லட்சம் முதல் ரூ.8.76 லட்சம் வரை உள்ளது.  இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 24.43 கிமீ ஆகும்.

MG Comet EV

இந்தியாவின் மிக குறைந்த விலை எலக்ட்ரிக் காராக விளங்குகின்ற எம்ஜி காமெட் இவி ஆன் ரோடு விலை ரூ.7.55 லட்சம் முதல் ரூ.9.25 லட்சம் வரை கிடைக்கின்றது. இந்த காரில் மூன்று கதவுகளை பெற்றுள்ள 230 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற 17.3 kWh பேட்டரியை பெறுகின்றது. குறைந்த விலை கொண்ட மாடலில் போதுமான வசதிகள் இருந்தாலும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு மற்ற ஏற்ற மாடலாகும்.

மேலும் படிக்க – குறைந்த விலையில் சிறந்த எஸ்யூவி மாடல்கள்

 

Exit mobile version