Automobile Tamilan

கூடுதலாக 5 % மைலேஜ் தரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V அறிமுகம்

மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்றுள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல் 5 % வரை கூடுதலான மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், இந்திய சந்தைக்கு புதிய ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற மாடல் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பாக இதே போன்ற ஹைபிரிட் நுட்பத்தை பெற்ற டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது ஃபார்ச்சூனரும் தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெளியாகியுள்ளது.

Toyota Fortuner mild hybrid

செயல்திறனில் எந்தவொரு சமரசமும் இல்லாமல் தொடர்ந்து 2.8 லிட்டர் டீசல் என்ஜினில் மாசு உமிழ்வை குறைக்கும் நோக்கில் மைல்டு ஹைப்ரிட் ஆனது 7.6 கிலோ எடை கொண்டுள்ள 48V லித்தியம் பேட்டரி தானாகவே சார்ஜ் செய்து கொள்வதுடன் 16 hp (12 kW) பவர், 65 Nm டார்க் வழங்குகின்றது.

எனவே, ஒட்டுமொத்தமாக  2.8-லிட்டர் டீசல் என்ஜின் DOHC, 16 வால்வு பெற்றது 3,400rpm-ல் 204 hp பவர் மற்றும் 1,600 முதல் 2,800 rpm-ல் 500Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்று 2WD மற்றும் 4WD என இருவித டிரைவ் ஆப்ஷனிலும் இடம்பெற்றுள்ளது.

மைலேஜ் பற்றி டொயோட்டா தெரிவிக்கையில், ஹைபிரிட் அல்லாத மாடலை விட 5 % வரை கூடுதலான மைலேஜ் வெளிப்படுத்துவதனை உறுதி செய்துள்ளது.  புதிய மாடல் தோற்ற அமைப்பில் லெஜென்டர் போலவே அமைந்திருப்பதுடன் 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு தொகுப்பினை வழங்கியுள்ளது.

இந்திய சந்தைக்கு மைல்டு ஹைபிரிட் நுட்பத்தை பெற்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் 48V வேரியண்ட் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version