டொயோட்டா கிளான்ஸா Vs மாருதி பலேனோ என இரு மாடல்களின் விலை மற்றும் சிறப்புகளை ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். பலேனோ காருக்கு இணையான விலையில் வந்துள்ள கிளான்ஸாவின் விலை, என்ஜின் மைலேஜ் மற்றும் வசதிகளை அறியலாம்.
மாருதியின் பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா இரு கார்களுக்கும் பெரிதான வித்தியாசம் என்றால் லோகோவை தவிர எந்த மாற்றமும் இல்லை என்றே குறிப்பிடலாம்.
இந்தியாவின் முதன்மையாக கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் காரை டொயோட்டா மற்றும் சுசுகி இடையிலான ஏற்பட்ட ஒப்பந்தம் மூலமாக டொயோட்டா மாருதியின் கார்களை விற்பனை செய்யும் வாய்ப்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் தனது முதல் ரீபேட்ஜ் செய்யபட்ட மாடலாக கிளான்சா வெளிவந்துள்ளது.
பொதுவாக இரு கார்களை சுசுகி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் தயாரிக்கின்றது. முன்புறத்தில் கிரில் அமைப்பில் மட்டும் மாற்றங்களை பெற்று டொயோட்டா லோகோவினை பெற்ற கிளான்ஸாவில் வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல், சிவப்பு, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் நீலம் என மொத்தமாக ஐந்து நிறங்களை பெற்றுள்ளது.
இன்டிரியரில் இரு கார்களும் மிக சிறப்பான டேஸ்போர்ட் அமைப்பினை கொண்டதாக 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டதாக அமைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதனை ஸ்மார்ட்பிளே கேஸ்ட் ஆடியோ சிஸ்டம் எனவும், மாருதி இதனை ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்ற பெயரில் வழங்குகின்றது.
கிளான்ஸா காரில் டீசல் என்ஜின் மட்டும் இடம்பெறவில்லை. மற்றபடி இரு கார்களும் இரண்டு பெட்ரோல் என்ஜின்களை பெற்றுள்ளது. 90 ஹெச்பி பவர் மற்றும் 113 NM டார்க் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு இரு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் G வேரியன்டில் மட்டும் பொருத்தப்பட்டு 5 மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் கிடைக்கும்.
க்ளான்ஸாவில் மற்றொரு பெட்ரோல் என்ஜின் 83 hp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் டார்க் 115 NM மற்றும் இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.01 கிமீ ஆகும்.
கிளான்ஸா Vs பலேனோ விலை ஒப்பீடு
கிளான்ஸா கார் கூடுதலான விலையில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பலேனோ காரை விட குறைந்த விலையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க நிலை வேரியனட் கிளான்ஸாவில் பலேனோ மாடலை விட ரூ.64,812 குறைவாக அமைந்துள்ளது.
அடுத்தப்படியாக மற்ற வேரியன்டுகள் அனைத்து ரூ.12 குறைவாக அமைந்துள்ளது. இங்கே வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
மாருதி பலேனோ | விலை | டொயோட்டா கிளான்ஸா | விலை |
---|---|---|---|
Sigma Petrol | ₹ 5,67,602 | – | – |
Delta Petrol | ₹ 6,48,612 | – | |
Zeta Petrol | ₹ 7,05,112 | ||
Delta Petrol SHVS | ₹ 7,37,412 | ||
Alpha Petrol | ₹ 7,68,212 | V MT Petrol | ₹ 7,68,100 |
Delta Petrol AT | ₹ 7,80,612 | ||
Zeta Petrol SHVS | ₹ 7,93,912 | G MT Petrol SHVS | ₹ 7,29,100 |
Zeta Petrol AT | ₹ 8,37,112 | G AT Petrol | ₹ 8,37,100 |
Alpha Petrol AT | ₹ 9,00,112 | V AT Petrol | ₹ 9,00,100 |
(ex-showroom Tamil Nadu)