Automobile Tamilan

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

ரூ.16.26 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளது. முந்தைய பிஎஸ்-6 கிரிஸ்ட்டா காரை விட ரூ.60,000-ரூ.70,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

8.80 லட்சம் வாகனங்கள் 15 ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போதைய மாடல் 3 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு மிகவும் நம்பகமான எம்பிவி காராக விளங்குகின்ற இன்னோவா க்ரிஸ்டா காரின் மேம்பட்ட மாடலில் தொடர்ந்து பிஎஸ்-6 ஆதரவினை பெற்ற  2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. 166 ஹெச்பி பவர் மற்றும் 245 என்எம் டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 150 ஹெச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க் வழங்கும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டிலும் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

சமீபத்தில் இந்தோனேசியாவில் வெளியிடப்பட்ட இன்னோவா காரின் தோற்ற அமைப்பிலே வந்துள்ள இந்திய மாடல் மிக நேர்த்தியாக முன்புற கிரில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு, 5 ஸ்லாட் கிரில் பெற்று வெளிப்புறத்தில் க்ரோம் பூச்சு பெற்றுள்ளது. அதே நேரத்தில் எல்இடி டி.ஆர்.எல் கொடுக்கப்பட்டு ஹெட்லைட்டின் சில இடங்களில் க்ரோம் பூச்சு சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற அமைப்பில் பம்பர் மற்றும் டெயில் விளக்கு அறை சற்று புதுப்பிக்கப்பட்டிருகின்றது. புதிதாக ஸ்பார்கிளிங் கிரிஸ்டல் பிளாக் நிறம் இணைக்கப்பட்டுள்ளது.

16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் இடம்பெற்று இன்டிரியரில் டாப் வேரியண்டில்  9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளது. கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 7 ஏர்பேக்குகள்,ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்புற பார்க்கிங் சென்சார் உள்ளது.

2021 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலை ரூ.16.26 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.24.33 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் இந்தியா (கேரளா தவிர)) நிறைவடைகின்றது.

web title : Toyota Innova Crysta Facelift Launched In India

Exit mobile version