Automobile Tamilan

பாரத் NCAPல் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

toyota innova hycross bncap

டொயோட்டா நிறுவனத்தின் முதல் பாரத் NCAP கிராஷ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் கார் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் என இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

இந்தியாவில் BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் பெற வேண்டிய 32 புள்ளிகளுக்கு 30.47 புள்ளிகளும், குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை பெற்று இதன் மூலம் 5 நட்சத்திர மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், EBD உடன் ABS, ISOFIX சைல்ட் சீட் ஆங்கர் பாயிண்டுகள், அனைத்து பயணிகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஓவர்ஸ்பீட் அலர்ட்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பக்கவாட்டு மோதலில் பெறவேண்டிய 16 புள்ளிகளுக்கு 16 புள்ளிகளும், முன்பக்க ஆஃப்செட் மோதலில் பெற வேண்டி 16 புள்ளிகளுக்கு 14.47 மட்டுமே பெற்றதாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சிறப்பான கட்டுமானத்தை இன்னோவா ஹைகிராஸ் கொண்டுள்ளது.

TOYOTA INNOVA HYCROSS fact sheet – BNCAP

Exit mobile version