Automobile Tamilan

டொயோட்டா அர்பன் க்ரூஸர் முன்பதிவு விபரம் வெளியானது

a1500 toyota urban cruiser booking

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் டீலர்களிடமும்  மேற்கொள்ளப்பட உள்ளது. புக்கிங் கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான டொயோட்டாவின் பிரத்தியேக கிரிலை கொண்டுள்ள அர்பன் மாடலில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மற்றபடி பக்கவாட்டு தோற்ற அமைப்பு, அலாய் வீல் மற்றும் பின்புறத்தில் பெரிதாக மாற்றங்களும் இருக்காது. விட்டாரா பிரெஸ்ஸா காரின் இன்டிரியரை பெற உள்ள இந்த மாடலில் எந்த மாற்றங்களும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

Exit mobile version