Automobile Tamilan

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

Toyota Urban Crusier Taisor price in tamil

டொயோட்டா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள அர்பன் குரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கிராஸ்ஓவர்  விலை ரூ.7.73 லட்சம் முதல் ரூ.13.03 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) அமைத்துள்ளது. இந்த மாடலை பொருத்தவரை ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் ஃப்ரான்க்ஸ் காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் கூட்டணி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாடல்களை மாருதி சுசூகி வசமிருந்த இருந்து டொயோட்டா நிறுவனம் பெற்று இருக்கின்றது. குறிப்பாக கிளான்ஸா, ரூமியன் எம்பிவி அதே போல அதேபோல மாருதி சுசூகி நிறுவனம் இன்விக்டோ, இரு நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய அர்பன் குரூஸர் ஹைரைடர் மற்றும் கிரான்ட் விட்டாரா மாடலும் விற்பனையில் இந்திய சந்தையில் கிடைத்து வருகின்றன.

2024 Toyota Urban Cruiser Taisor

ஃபிரான்க்ஸ் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருந்தாலும் தோற்ற அமைப்பில் வித்தியாசப்படுத்தும் வகையில் முன்பக்கத்தில் தேன்கூடு அமைப்பிலான கிரிலுடன், ட்வீன் எல்இடி  மாறுபட்ட பம்பர் மற்றும் ஹெட்லைட்டில் சிறிய மாற்றங்கள் தரப்பட்டுள்ள்ளது.

பக்கவாட்டுத் தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் புதுப்பிக்கப்பட்ட புதிய டிசைன் கொண்ட 16 அங்குல அலாய் வீல் அளவில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்றபடி, பின்புற பம்பர் மற்றும் கிளாடிங் உள்ளிட்டவற்றில் சில மாற்றங்கள் கொடுக்கப்பட்டு பிரண்ட்ஸ் மாடலை விட வேறுபடுத்தி தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.

இன்டீரியரில் வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த மாடலுக்கு இந்த மாடலுக்கு சிறிய அளவிலான வித்தியாசங்களை ஏற்படுத்தும் வகையில் டாஷ்போர்ட் பேனல்களின் நிறமும் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரி நிறமானது மாற்றப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஹீல் ஹோல்டு அசிஸ்ட் வசதி, இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது.

டைசர் எஞ்சின் விபரம்

1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வழங்குகின்ற காரில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இருவிதமான ஆப்ஷனில் கிடைக்கின்றது.

டாப் வேரியண்டில் சக்திவாய்ந்த 100hp பவர், மற்றும் 148 Nm டார்க் உற்பத்தி செய்கின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

சிஎன்ஜி வேரியண்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை அடிப்படையாக கொண்டு 77.5hp பவர் மற்றும் 98.5Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது.

டைசர் போட்டியாளர்கள்

டொயோட்டா டைசருக்கு போட்டியாக மாருதி ஃபிரான்க்ஸ் உட்பட 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவிகளான நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஆகியவை போட்டியாக அமைந்திருக்கின்றது.

Toyota Urban Cruiser Taisor Price list

Exit mobile version