Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் டொயோட்டா அர்பன் எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம்

toyota urban suv concept

டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய அர்பன் எஸ்யூவி கான்செப்ட் மாடல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்படலாம். இந்த மாடல் ஏற்கனவே காட்சிப்படுத்திய மாருதி சுசூகி eVX கான்செப்ட்டை மாற்றியமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.

2026 ஆம் ஆண்டுக்குள் 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Toyota Urban SUV concept

டொயோட்டா மற்றும் சுசூகி இடையே உள்ள ஒப்பந்தம் மூலமாக பல்வேறு மாடல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற நிலையில் ஏற்கனவே சுசூகி காட்சிப்படுத்திய eVX அடிப்படையிலான தோற்றத்த்தை பெற்றிருந்தாலும் பரிமாணங்களிலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

புதிய அர்பன் எஸ்யூவி கான்செப்ட் பரிமாணங்கள் 4,300 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என டொயோட்டா குறிப்பிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தற்போது இந்திய சந்தையில் கிடைக்கின்ற B-பிரிவு நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.

புதிய அர்பன் எஸ்யூவி கான்செப்ட் சுசூகி நிறுவனத்துடன் பேட்டரி ஆப்ஷனை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால்  60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சை கொண்டிருக்கும் மற்றும் 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400கிமீ வரம்பினை வழங்கலாம்.  2WD மற்றும் 4WD என இரு விதமான ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

ஐரோப்பா சந்தையில் டொயோட்டா அர்பன் எஸ்யூவி கான்செப்ட் உற்பத்தி நிலைக்கு 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு வெளியிடப்படலாம். இந்தியாவில் evx அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியாகலாம். அதனை தொடர்ந்து டொயோட்டா இந்திய சந்தையிலும் தனது முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும்.

Exit mobile version