இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் மாடலான eVX படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்பாக பல்வேறு படங்கள் வெளிநாடுகளில் சோதனை செயப்பட்டதில் தற்பொழுது முதன்முறையாக இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளது.
மாருதியின் eVX எஸ்யூவி கார் இந்திய சந்தையில் முதன்முறையாக 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து விற்பனைக்கு வெளியாக உள்ளது.
Maruti Suzuki eVX electric SUV
சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்ற eVX எஸ்யூவி காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550 கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது. இரண்டாவதாக குறைந்த 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400 கிமீ வரம்பினை வழங்கலாம்.
சுசூகி eVX எஸ்யூவி பரிமாணங்கள் 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் ஜப்பான் மோட்டார் ஷோவில் இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியான நிலையில், மிக எளிமையான வடிவமைப்பினை கொண்டாலும் மத்தியில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யக்கூடிய மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் காரின் விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சந்தையில் வரவுள்ள ஹூண்டாய் கிரெட்டா இவி, சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் இவி போன்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான போட்டியாளராக விளங்கும்.
image – youtube/speed shifter