வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா தார் எலக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்வதனை உறுதிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது. முன்பாக ஸ்கார்பியோ பிக் அப் மாடல் டீசரையும் வெளியிட்டிருந்தது.
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆஃப் ரோடு மாடலான தார் அடிப்படையில் வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவி 400 கிமீ கூடுதலான ரேஞ்சு வெளிப்படுத்துவதுடன் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தையும் வழங்கும்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் புதிய ஸ்கார்பியோ என் பிக்கப் டிரக்கினை வெளியிட உள்ள நிலையில், இதே அரங்கில் எலக்ட்ரிக் வெர்ஷனாக தார் எஸ்யூவி மாடலை வெளியிட உள்ளது.
சமூக ஊடகங்களில் மஹிந்திரா வெளியிட்டுள்ள டீசர் மூலம், தார் தொடர்ந்து ஆஃப்-ரோடு தன்மைக்கு ஏற்ற கான்செப்ட் EV 4X4 கொண்டிருக்கும். இருப்பினும் சுவாரஸ்யமாக, இரட்டை மோட்டார் ஏற்பாட்டைப் பயன்படுத்தும் பல 4WD EV மாடலை போலல்லாமல், தார் கான்செப்ட் EV குவாட் மோட்டார் அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா Thar.e கார் பற்றி முழுமையான விபரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவரும். இதுதவிர இந்நிறுவனம் 5 எலக்ட்ரிக் எஸ்யூவிகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.