Automobile Tamilan

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

renault duster suv

இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனம் அடுத்த 18-24 மாதங்களுக்குள் இரண்டு எஸ்யூவி மற்றும் ஒரு எலக்ட்ரிக் கார் என மொத்தமாக மூன்று மாடல்களை வெளியிட உள்ளது. பலரும் அறிந்த அந்த மாடல்கள் டஸ்ட்டர், பிக்ஸ்டெர் மற்றும் க்விட் இவி ஆகும்.

ஏற்கனவே இந்நிறுவனம் கிகர், ட்ரைபர் மற்றும் ஐசிஇ ரக க்விட் ஆகியவற்றை மேம்படுத்தி விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள காராக டஸ்ட்டர் வரவுள்ளது.

Renault Duster

சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற டஸ்ட்டரை அடிப்படையாக கொண்டு வரவுள்ள புதிய இந்திய டஸ்ட்டர் எஸ்யூவி காரில் பெட்ரோல், பெட்ரோல் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடுதலாக எல்பிஜி ஆப்ஷனும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக டாப் வேரியண்டின் இன்டீரியரில் 3 ஸ்கீரின் செட்டப் கொடுக்கப்படலாம்.

120hp, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 140hp, 1.2-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் 170hp, 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆதரவான என்ஜினாக உள்ளது.

விற்பனைக்கு ரூ.10-11 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த டஸ்ட்டர் எஸ்யூவி ஜனவரி 2026ல் கிடைக்க வாய்ப்புள்ளது.

Renault Bigster

டஸ்ட்டரின் 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெர் மாடலும் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலில் உள்ள என்ஜின் ஆப்ஷனும் டஸ்ட்டரில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

Renault Kwid EV

சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள க்விட் இவி மாடலினை இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டிலே தயாரித்து பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொண்டு வர ரெனால்ட் திட்டமிட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

டேசியா பிராண்டில் ஸ்பிரிங் இவி என விற்பனை செய்யப்படுகின்ற இந்த க்விட் மின்சார காருக்கான பேட்டரி பெற வாய்ப்புள்ளதால், 26.8kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்ச ரேஞ்ச் 225km ஆக வழங்கலாம் என கூறப்படுகின்றது. அதிகபட்ச வேகம் மணிக்கு 125கிமீ எட்டுவதுடன் பவர் 33kW வழங்கலாம்.

30kW DC விரைவு சார்ஜரை பயன்படுத்தி 20-80 % சார்ஜிங்கை  45 நிமிடத்தில் பெறும் திறனுடன் வரவுள்ள க்விட் இவி விலை ரூ.8-10 லட்சத்துக்குள் துவங்குவதுடன் விற்பனைக்கு 2026 இறுதி அல்லது 2027 துவக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும்.

Exit mobile version