இந்தியாவில் ஜனவரியில் வரவிருக்கும் கார் விபரம்

இந்திய கார் சந்தையில் நடப்பு ஜனவரி மாதம் மிகப்பெரிய 6 கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக டாடா ஹேரியர். நிசான் கிக்ஸ், வேகன்ஆர், கேம்ரி போன்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியாக உள்ள கார் பட்டியல் ஆகும்.

1 . டொயோட்டா கேம்ரி

டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனம், இந்திய சந்தையில் ஜனவரி 18, 2019-ல் புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடலை விற்பனைக்கு ரூ.39 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் மாடலில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் நான்கு சிலின்டர் என்ஜின் 211PS பவர் மற்றும் 202Nm பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 120PS பவர் மற்றும் 202Nm டார்க்கினை வழங்கும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2. நிசான் கிக்ஸ்

க்ராஸ்ஓவர ரக எஸ்யூவி மாடலாக வெளியாக உள்ள நிசான் கிக்ஸ் மிகுந்த எதிர்பார்பினை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற ஜனவரி 22, 2019-ல் வெளியாக உள்ள நிசான் கிக்ஸ் ரூ. 9 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடலாம்.

ரெனோ கேப்டூர், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்றவற்றை எதிர்கொள்ள உள்ள கிக்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 BHP பவர், 142 NM டார்க் மற்றும் 5 வேக மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 BHP பவர், 240 NM டார்க் 6 வேக மேனுவல் மற்றும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் வழங்கப்படலாம்.

3. டாடா ஹேரியர்

மிகவும் பிரசத்தி பெற்ற டாடா ஹேரியர் எஸ்யூவி ஜனவரி மாத அறிமுகத்தில் மிக முக்கிய அந்தஸ்த்தை பெறுகின்றது. குறிப்பாக நவீனத்துவமான டிசைனை பெற்ற டாடா ஹேரியர்  ஜனவரி 23, 2019-ல் வெளியாக இந்த எஸ்யூவி விலை ரூ. 16 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடலாம்.

140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

4. மாருதி சுஸூகி வேகன்ஆர்

முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட புதிய மாருதி சுஸூகி வேகன்ஆர் கார், ஜனவரி 23, 2019-ல் வெளியாக இந்த எஸ்யூவி விலை ரூ. 4.50 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடலாம்.

புதிதாக K12M 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 91 பி.எஸ். மற்றும் 118 என்.எம். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதைத் தவிர K10B 1.0 லிட்டர் 67 bhp பவர் மற்றும் 90 NM டார்க் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் விற்பனை வரவுள்ளது.

5. மெர்சிடிஸ்-பென்ஸ் வி கிளாஸ்

பிரிமியம் ரக எம்பிவி சந்தையில் களமிறங்க உள்ள மெர்சிடிஸ் – பென்ஸ் வி கிளாஸ் கார், ஜனவரி 24, 2019-ல் வெளியாக இந்த எஸ்யூவி விலை ரூ. 75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடலாம்.

வி கிளாஸ் மாடலில் 194PS மற்றும் 400 Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

6. பிஎம்டபிள்யூ X7

ஆடம்பரத்தின் உச்சகட்டமாக விளங்கும் பிஎம்டபிள்யூ X7 மாடல் ஜனவரி 31, 2019-ல் ரூ.1.60 கோடி விலையில் விற்பனைக்கு வெளியாக வாய்ப்பு உள்ளது.