Automobile Tamilan

ஜனவரி 2025ல் ஸ்கோடா கைலாக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

2025 skoda kylaq

ஸ்கோடா இந்தியாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு கைலாக் (Skoda Kylaq) என்ற பெயரை சூட்டி உள்ளது மேலும் விற்பனைக்கு ஜனவரி 2025-ல் அறிமுகம் செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கை-லாக் (Kai-lock) என்று உச்சரிக்கப்படும் என ஸ்கோடா குறிப்பிடும் நிலையில், இது கைலாஷ் மலைக்கு ஒரு தலையீடு என்றும், செக் குடியரசின் புகழ்பெற்ற கிரிஸ்டலுக்கான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக 10 பெயர்களில் அதிக நபர்களால் வாக்களிக்கப்பட்ட பெயரை ஸ்கோடா இந்தியா நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது இந்த பெயரில் அதிக வாக்களித்தவர்களுக்கு சிறப்பு பரிசாக சிலருக்கு மட்டும் செக் குடியரசு நாட்டில் உள்ள என் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது மேலும் பல்வேறு நபர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது

நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் உள்ள பல்வேறு மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலுக்கு 1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் ஆனது பொருத்தப்பட்டிருக்கும்.

Kylaq எஸ்யூவி காரில்1.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 113 bhp பவர் மற்றும் 178 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது பெற உள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, ஹூண்டாய் வெனியூ, கியா சோனெட், மாருதி பிரான்க்ஸ், பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் குரூஸர் ஆகியவற்றை இந்த ஸ்கோடா எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது. வருகின்ற ஜனவரி மாத துவக்க வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version