Automobile Tamilan

6 ஏர்பேக்குடன் 2024 சிட்ரோன் C3 விற்பனைக்கு வெளியானது

2024 citroen c3

சிட்ரோன் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான C3 காரில் ஆறு ஏர்பேக்குகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப விலை ₹ 6,16,000 துவங்கினாலும் டாப் வேரியண்டின் விலை ₹ 9,41,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Live துவக்க நிலை வேரியண்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெறவில்லை.

Feel மற்றும் shine வேரியண்டுகளில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விலை ரூபாய் 30,000 வரை உயர்ந்துள்ளது. முன்பாக Feel வேரியண்டில் டர்போ பெட்ரோல் எஞ்சின் கிடைத்து வந்த நிலையில் தற்பொழுது டாப் ஷைன் வேரியண்ட் மட்டும் ப்யூர்டெக் 110 எஞ்சினை பெறுகின்றது.

6 ஏர்பேக்குகள் மட்டுமல்லாமல் இந்த காரில் இப்பொழுது எல்இடி ப்ராஜெக்டர் ஹெட்லைட் ஆனது சேர்க்கப்பட்டு கூடுதலாக ஃப்ளிப் கீ, ஆட்டோமேட்டிக் ஏசி, ஓட்டுநர் பக்கத்தில் பவர் விண்டோஸ், விங் மிரர்-யில் டர்ன் இன்டிகேட்டர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பின்புறத்தில் உள்ள ரியர் ஏசி வென்ட் போன்றவை எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

82 PS பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 82 சாதரண பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது.

110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜூம் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது.

(Ex-showroom)

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை.

Exit mobile version