ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ TSI சிறப்பு எடிஷன் விற்பனைக்கு வெளியானது

ஃபோக்ஸ்வாகன் ஆட்டோவின் போலோ மற்றும் வென்ட்டோ என இரு மாடல்களிலும் சிறப்பு TSI எடிஷனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ.7.89 லட்சத்தில் போலோ மாடலும், ரூ.10.99 லட்சத்தில் வென்ட்டோ மாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் உள்ள ஹைலைன் பிளஸ் வேரியண்டின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடல் டாப் ஹைலைன் பிளஸ் வேரியண்டினை விட விலை குறைவாக அமைந்திருக்கின்றது. போலோ கார் ரூ.13,000, வென்ட்டோ ரூ.1 லட்சம் வரை குறைவாக உள்ளது.

இந்த ஹேட்ச்பேக் மற்றும் செடான் மாடலில் மிகவும் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 110 ஹெச்பி மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் போலோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 18.24 கிமீ, செடான் ரக வென்ட்டோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 17.69 கிமீ ஆகும்.

ஹைலைன் பிளஸ் வேரியண்டில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடுதலாக சிறப்பு பாடி ஸ்டிக்கரிங், டி.எஸ்.ஐ பேட்ஜ், கருப்பு நிறத்தைப் பெற்ற மேற்கூறை, மிரர் கவர் மற்றும் பின்புற ஸ்பாய்லரை பெற்றுள்ளது.

இந்த காருக்கு ஃபோக்ஸ்வாகன் இணையதளத்தில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

Share