இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி முந்தைய 5 இருக்கைக்கு மாற்றாக 7 இருக்கைகளை கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முந்தைய டிகுவான் 5 இருக்கை மாடலை போலேவே அமைந்திருந்தாலும் கூடுதலாக 110 மீமீ வரை நீட்டிக்கப்பட்டு வீல்பேஸ் மறும் 215 மிமீ வரை அதிகரிக்கப்பட்ட நீளத்தைப் பெற்ற இந்த மாடல் தற்போது 7 இருக்கை பெற்றதாக முழுமையான வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.
முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள், பனரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.
விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை ஃபோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடலில் 190 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 143 ஹெச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் இடம்பெற உள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை ஏழு ஏர்பேக்கு, ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொண்டுள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்ட 5 இருக்கை கொண்ட ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ரூ.28 லட்சத்தில் துவங்கிய நிலையில் தற்போது வரவுள்ள புதிய மாடல் ஆல்ஸ்பேஸ் ரூ.32 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் விற்பனைக்கு மார்ச் 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ…
ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனை செய்து வருகின்ற டைகன் மற்றும் விர்டஸ் எ இரு மாடல்களிலும் தொடர்ந்து பல்வேறு கூடுதல் வசதிகள்…
65க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி காரில் தற்பொழுது Visia, Visia+,Acenta,…
ஃபேரிங் ஸ்டைலை பெற்ற சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் GSX-8R ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் 776cc பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின்…
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 2.2…
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திஃ பிரசத்தி பெற்ற 'Punch' எஸ்யூவி மாடலில் கேமோ எடிசனை மற்ற மாடல்களை…