Automobile Tamilan

400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது

volvo xc40 recharge

வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரினை XC40 ரீசார்ஜ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. 402 ஹெச்பி பவருடன் அதிகபட்சமாக 400 கிமீ பயணிக்கு திறனுடன் வந்துள்ளது. வால்வோ நிறுவனத்தை பொருத்தவரை மிகவும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றது. இனி, ரீசார்ஜ் என்ற பெயரினை தனது எலெக்ட்ரிக் மற்றும் பிளக் இன் ஹைபிரிட் மாடல்களில் பயன்படுத்த உள்ளது.

வால்வோ XC40 ரீசார்ஜ் மின்சார காரில் நான்கு சக்கர டிரைவ் பெற்று இரண்டு 201 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டாரில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளன. அவை இணைந்து அதிகபட்சமாக 402 ஹெச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க்கை வழங்குகின்றன. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய 4.9 விநாடிகள் தேவைப்படுகின்றது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

78 கிலோவாட்  பேட்டரியிலிருந்து சக்தியை பெறுகின்ற இந்த காரின் வரம்பு 400 கிமீ கிடைக்கும் என WLTP மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. 11 கிலோவாட் ஏசி சார்ஜர் அல்லது 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யலாம். 150 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும்போது வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் ஆகும் திறனை பெறும்.

ஐசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு விற்பனையில் கிடைக்கின்ற மாடலின் தோற்ற அமைப்பிலே வடிவமைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் எக்ஸ்சி 40 ரீசார்ஜ் மின்சார காரில் முன்புற கிரில் முற்றிலும் மாற்றப்பட்டு கூடுதலாக ரீசார்ஜ் பேட்ஜ் பெற்றுள்ளது. சார்ஜிங் போர்ட் பின்புறத்தில் அமைந்துள்ளது.

பேட்டரி எலக்ட்ரிக் வோல்வோ எக்ஸ்சி 40 ரீசார்ஜின் மற்றொரு சிறப்பம்சமாக கூகிளின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கொண்டு இயங்கும் புத்தம் புதிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. புதிய சிஸ்டத்தில் வோல்வா நிறுவனத்தின் ஆன் கால் டிஜிட்டல் கனெக்டேட் சேவைகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையிலும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள ஐந்து முழு எலக்ட்ரிக் மாடல்களில் இதுவே முதன்மையானதாக இருக்கும், மேலும், வோல்வோ 2025 ஆம் ஆண்டளவில் அதன் உலகளாவிய விற்பனையில் அரை பங்கிற்கு மின்சார வாகனங்களாக இலக்கு வைத்துள்ளது, மீதமுள்ளவை ஹைபிரிட் பவர் ட்ரெயினைக் கொண்டதாக இருக்கும்.

மேலும், 2025 ஆம் ஆண்டில் ஒரு வாகனத்திற்கு அதன் வாழ்க்கை சுழற்சி கார்பன் தடம் 40 சதவிகிதம் குறைக்கும் திட்டத்துடன், 2040 ஆம் ஆண்டில் கால சூழ்நிலை நடுநிலையாக இருக்க வேண்டும் என இலக்கை கொண்டுள்ளது.

Volvo XC40 Recharge Image Gallery

 

Exit mobile version