Automobile Tamilan

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 new mahindra thar suv on road price

மஹிந்திரா நிறுவனத்தின் 3-டோர் கொண்டுள்ள ஆஃப்ரோடு தார் எஸ்யூவி மாடலின் 3 ஆன்-ரோடு விலை ரூ.12.05 லட்சம் முதல் துவங்கி ரூ.21.45 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம்.

Mahindra Thar SUV

இந்த தார் எஸ்யூவி வாங்க விரும்புவர்கள் ஆஃப் ரோடு சாகசங்களுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது. ஆனால் இதனை கடந்து அதிக சிட்டி பயணங்கள், சொகுசு வசதிகள், சிறப்பான சஸ்பென்ஷன், வயதானவர்கள் அதிகம் பயணிப்பார்கள் என்றால் தார் ராக்ஸ் அல்லது வேறு மாடலை வாங்கலாம்.

152hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் mStallion 150 TGDi டர்போ-பெட்ரோல், 119hp பவரினை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் D117 CRDe டீசல் மற்றும் இறுதியாக, 132hp பவர் பெற்ற 2.2 லிட்டர் mHawk 130 CRDe டீசல் என மூன்று விதமாக பெற்று மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்கள் தொடர்கின்றன.

Mahindra Thar on-road Price in Tamil Nadu

1.5  லிட்டர் டீசல் பெற்ற மாடல் ரூ.12.05 லட்சம் முதல் ரூ.15.30 லட்சம் வரையும், 2.2 லிட்டர் டீசல் 4WD கொண்டுள்ள மாடல் ரூ.19.52 லட்சம் முதல் ரூ.21.45 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில், இறுதியாக பெட்ரோலில் கிடைக்கின்ற தாரின் விலை ரூ.17.72 முதல் ரூ.20.53 வை கிடைக்கின்றது.

விலை Ex-showroom on-road price
1.5l Diesel AXT 2WD ₹ 9,99,000 ₹ 12,04,743
1.5l Diesel LXT 2WD ₹ 12,19,000 ₹ 15,30,046
2.2L Diesel LXT 4WD MT ₹ 15,49,000 ₹ 19,52,653
2.2L Diesel LXT 4WD AT ₹ 16,99,000 ₹ 21,44,543
2.0 Petrol LXT 2WD AT ₹ 13,99,000 ₹ 17,71,545
2.0 Petrol LXT 4WD MT ₹ 14,69,000 ₹ 18,56,899
2.0 Petrol LXT 4WD AT ₹ 16,25,000 ₹ 20,53,086

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில், காப்பீடு, ஆர்டிஓ மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை, முழுவிபரங்களுக்கு டீலரை அனுகுங்கள்.

தார் என்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்

1.5 லிட்டர் ஆரம்ப நிலை டீசல் மாடல் 3000rpm-ல் 119hp பவரினை வெளிப்படுத்துகின்ற நிலையில் 300Nm டார்க் கொண்டு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்பட்டு அடிப்படையான வசதிகளை மட்டும் பெற்றுள்ளது.

132hp பவர் பெற்ற 2.2 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 300 என்எம் டார்க் வழங்குவதுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்ற நிலையில் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 11 கிமீ முதல் 13 கிமீ வரை வழங்குகின்றது.

இறுதியாக 152hp பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் டார்க் 300Nm ஆக உள்ள நிலையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டிலும் கிடைக்கின்ற நிலையில் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 8 கிமீ முதல் 11 கிமீ வரை வழங்குகின்றது.

வேரியண்ட் மற்றும் வசதிகள்

4 இருக்கை பெற்ற தார் எஸ்யூவியில் அடிப்படையாக அனைத்து வகையிலும்  டூயல் ஏர்பேக், ABS மற்றும் ESP (Roll-over Mitigation) ஆகியவற்றுடன் ஹீல் ஹோல்டு மற்றும் டிசென்ட் கண்ட்ரோல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பாக குழந்தைகளுக்கான ISOFIX மவுண்ட் இருக்கை, ரோல் கேஜ் ஆகியவை தரநிலையாக உள்ளன.

ஆரம்பநிலை AXT வேரியண்டில் LED டெயில் லேம்ப்கள், 16-இன்ச் ஸ்டீல் வீல்கள், பின்புற ஏசி வென்ட்,, ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய சென்டர் கன்சோல், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, வினைல் இருக்கை அப்ஹோல்ஸ்டரி, A-பில்லரில் கிராப் ஹேண்டில்கள், பவர் விண்டோஸ் முன்பக்கத்தில், எலக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிஃபெரன்ஷியல் (RWD) போன்றவை உள்ளது.

டாப் LXT வேரியண்டில்

போட்டியாளர்கள்

தார் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக 5 டோர் தார் ராக்ஸ், மாருதி சுசூகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் கூர்கா போன்றவை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Mahindra Thar SUV Gallery

Exit mobile version