ஜிஎஸ்டி பைக் விலை : ஹோண்டா பைக்குகள் விலை குறையும்..!

வரும் ஜூலை 1ந் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வருவதனை ஒட்டி பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை குறைக்க ஹோண்டா டூவீலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா பைக்குகள்

ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைக்கு வருவதனால் பல்வேறு கார் நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்கியிருந்தாலும் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார்சைக்கிள் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றது.

ஜிஎஸ்டி-க்கு பிறகு ஹோண்டா பைக்குகள் விலை 3 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 5 சதவிகிதம் வரை  வாய்ப்புகள் உள்ளதால் மேலும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பலன்களை வழங்க உள்ளதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் தெரிவித்துள்ளார். ஹோண்டாவின் 350சிசி க்கு உள்பட மாடல்கள் ரூ.4500 வரை விலை குறைக்கப்பட உள்ளது.

சமீபத்தில் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் மாடல் ஊரக பகுதி மற்றும் வளரும் நகரங்கள் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள 8 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் ஹெச்இடி நுட்பத்துடன் கூடிய ஆக்டிவா எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஸ்கூட்டர் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில் அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Exit mobile version