Automobile Tamilan

ஜிஎஸ்டி வரி : கார், பைக், டிரக், பஸ், வாகன காப்பீடு பற்றி முழுவிபரம்..!

ஒரே தேசம் ஒரே வரி என்ற கோட்பாடுடன் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜிஎஸ்டி வரி பற்றி பல்வேறு தகவல்களை நாம் அறிந்து கொண்டுள்ள நிலையில் ஆட்டோமொபைல் துறையின் முழுமையான விபரங்களை ஒரே தொகுப்பில் காணலாம்.

ஜிஎஸ்டி ஆட்டோமொபைல்

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிக்கலான வரிமுறைக்கு மாற்றாக எளிமைப்படுத்தப்பட்ட ஒருமுனை வரியாக வெளியிடப்பட உள்ளதால் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் பெருமளவு ஏற்பட உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என இங்கே அறியலாம்.

ஜிஎஸ்டி என்றால் என்ன ?

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஜிஎஸ்டி வரி பிரிவுகள்

1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை  5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி மோட்டார் வரி விபரம்

நான்கு பிரிவுகளில் உள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி-யில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து  மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில்  டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கார்

கார்களுக்கு தற்போது பல்வேறு மாறுபட்ட வரிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் புதிய ஜிஎஸ்டி வரியின் முழுவிபர அட்டவனையை கீழே காணலாம்.

பயணிகள் வாகனம் (4 வீலர்)
தற்போது வரி ஜிஎஸ்டி
 வாகன வகைகள்   அடிப்படை  பிரிவு செஸ் வரி  மொத்தம்
சிறிய பெட்ரோல் கார்கள் 4 மீட்டருக்கு குறைவு மற்றும் 1200சிசி டீசல் எஞ்சினிக்கு குறைவு 31.4% 28% 1% 29%
சிறிய டீசல் கார்கள் 4 மீட்டருக்கு குறைவு மற்றும் 1500சிசி டீசல் எஞ்சினிக்கு குறைவு 33.4% 28% 3% 31%
நடுத்தர ரக கார்கள் 4 மீட்டருக்கு அதிகமான நீளம் மற்றும் குறைவான 1200சிசி அல்லது 1500சிசி எஞ்சின் 46.6% 28% 15% 43%
பெரிய கார்கள் 1500சிசி க்கு அதிகமான எஞ்சின் 51.8% 28% 15% 43%
எஸ்யூவி 55.3% 28% 15% 43%
மின்சார கார்கள் 20. 5% 12 % 0 % 12 %
ஹைபிரிட் கார்கள் 30.3% 28% 15% 43%

லாபம் யாருக்கு ?

ஆடம்பர கார்கள் மற்றும் எஸ்யூவி-கள் வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி மிகுந்த பலனை தருகின்றது. நடுத்தர பிரிவில் செடான் ரக கார் வாங்குபவர்களுக்கு ஒரளவு பலன் கிடைக்கும். மின்சார கார் வாங்குபவர்கள் சிறப்பான பலனை பெறுவார்கள்

நஷ்டம் யாருக்கு ?

நடுத்தர குடும்பங்களின் கனவாக அமைகின்ற சிறிய கார்களின் விலை கனிசமாக உயரும் குறிப்பாக ஹைபிரிட் கார்கள் மற்றும் மைல்டு ஹைபிரிட் நுட்பம் பெற்ற கார்களை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள்  தள்ளுப்படுகின்றனர்.

ஜிஎஸ்டி இருசக்கர வாகனம்

இருசக்கர வாகனங்களுக்கு இருவிதமான முறையிலே ஜிஎஸ்டி வசூலிக்கப்பட உள்ளது. இது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு பொருந்தும்

இரு சக்கர வாகனங்கள் (பைக் & ஸ்கூட்டர்)
வெளியேறும் வரி ஜிஎஸ்டி
350சிசி-க்கு குறைவான எஞ்சின் 30.2% 28%
350சிசி-க்கு அதிகமான எஞ்சின் 30.2% 31%

லாபம் யாருக்கு ?

350சிசி க்கு குறைவான மோட்டார் சைக்கிள் வாங்கும் அனைவருக்குமே சிறிய அளவில் பலன் கிடைக்கும்.

நஷ்டம் யாருக்கு ?

சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஜிஎஸ்டி வரி கூடுதல் சுமையாக அமையும்.

ஜிஎஸ்டி வர்த்தக வாகனம்

பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சரக்கு ரக வாகனங்கள் உள்பட விவசாய ரீதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்துப்படும் வாகனங்கள் வரை இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வாகனங்கள் (டிரக் & பேருந்து)
வெளியேறும் வரி ஜிஎஸ்டி
வர்த்தக வாகனங்கள் 30.2% 28%
பேருந்துகள், 10 முதல் 13 இருக்கை பெற்ற வேன்கள் 30.2% 43%
மூன்று சக்கர வாகனம் 29.1% 28%
டிராக்டர் 12-13 % 12 %

லாபம் யாருக்கு ?

முந்தைய வரிமுறைக்கு சற்று கூடுதலான பலனை டிரக்குகள், லாரிகள் மற்றும் மினி டிரக்குகள் போன்றவை பெறும்.

நஷ்டம் யாருக்கு ?

டிராக்டர்கள் விலை அதிகரிக்கும், பேருந்துகள் மற்றும் 10 அல்லது 13 இருக்கை கொண்ட வாகனங்கள் விலை அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி மோட்டார் உதிரிபாகங்கள்

மோட்டார் உதிரிபாகங்களுக்கான வரி தற்போது சதவிகிதம் மாநிலம் வாரியாக மாறுபட்டு இருந்தாலும் ஜிஎஸ்டி  வரவினால் 28 சதவிகிதம் என அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் உதிரிபாகங்கள் விலை உயரும் என்பதனால் வாகனங்கள் தயாரிப்பு விலை உயரும் எனவே பெரிதாக விலை குறைப்பு என்பதற்கு சாத்தியங்கள் இல்லை மாறாக டிராக்டர், ஹைபிரிட் வாகனங்கள் விலை கடுமையாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிஎஸ்டி வாகன காப்பீடு

 

தற்போது நடைமுறையில் உள்ள வரியின் அடிப்படையில் மோட்டார் வாகன காப்பீடு திட்டங்களுக்கு 15 சதவிகிதமாக உள்ள நிலையில் ஜிஎஸ்டி-யின் காரணமாக வரி 18  சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் காப்பீடு வரி உயர்வடையும். வருடத்திற்கு 10,000 காப்பீடு செலுத்தப்படுகின்ற வாகனத்திற்கு தற்போதை நடைமுறையின்படி 1500 ரூபாய் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரவால் 1800 ரூபாய் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

இலவச சேவை மற்றும் கூடுதல் கருவிகள்

ஆக்செரிஸ்கள் மற்றும் இலவச சேவைகளும் தற்போது ஜிஎஸ்டி நடைமுறைக்கு கீழ் அடங்குவதனால் வரி விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும், தற்போதைக்கு இந்த பிரிவு குறித்தான முழுவிபரம் கிடைக்க பெறவில்லை. ஜிஎஸ்டி அறிமுகத்திற்கு பிறகு இந்த பிரிவை அறிந்து கொள்ளலாம்.

கார் மற்றும் பைக் நிறுவனங்களின் புதிய ஜிஎஸ்டி வரி விலை பட்டியலை வெளியிடப்பட உள்ள நிலையில் உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள்…! ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்..!

மேலும் நமது பேஸ்புக் — > Fb.com/automobiletamilan ட்விட்டர் —> twitter.com/automobiletamil

Exit mobile version