Site icon Automobile Tamil

பைக் விற்பனை நிலவரம் – மே 2015

இந்தியாவில் பைக் மற்றும் ஸுகூட்டர்களின் மே மாத விற்பனை நிலவரங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஹோண்டா, ராயல் என்பீல்டு , சுசூகி , டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியும் , ஹீரோ , பஜாஜ் , மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டுள்ளது.
ராயல் என்பீல்டு
1. ஹீரோ
உலகின் அதிக இருசக்கர  வாகனங்களை தயாரிக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 5.41 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 5,69,876 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 6,02,841 பைக்குகளை விற்பனை செய்தது. 
2. ஹோண்டா
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 3.30 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 3,53,440 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 3,42,136 பைக்குகளை விற்பனை செய்தது. 
3.பஜாஜ்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மே மாதத்தில் 3.56 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 3,01,862 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 3,13,020 பைக்குகளை விற்பனை செய்தது. 
4.  டிவிஎஸ்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 3.45 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.. மே மாதத்தில் மொத்தம் 1,75,533 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,69,671 பைக்குகளை விற்பனை செய்தது. 
5. சுசூகி மோட்டார்சைக்கிள்
 சுசுகி இந்தியா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 3.64 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.. மே மாதத்தில் மொத்தம் 33,287 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 32,117 பைக்குகளை விற்பனை செய்தது. 
6. மஹிந்திரா டூ வீலர்
மஹிந்திரா இருசக்கர தயாரிப்பு பிரிவு கடந்த மே மாதத்தில் 34.32 சதவீத விற்பனை சரிவை சந்தித்துள்ளது. மே மாதத்தில் மொத்தம் 10,428 பைக்குகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 15,878 பைக்குகளை விற்பனை செய்தது.
7. ராயல் என்பீலடு
ராயல் என்பீலடு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் 41.35 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  மே மாதத்தில் மொத்தம் 35,345 வாகனங்களை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டு மே மாதத்தில் 25010 பைக்குகளை விற்பனை செய்தது.

Two wheeler sales report may 2015

Exit mobile version