ராயல் என்பீல்டு புல்லட் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

ஜஷர் குழுமத்தின் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த காலாண்டின் முடிவில் 40 % வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்கிற்க்கான காத்திருப்பு காலத்தினை குறைக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 

புல்லட் சந்தையில் முத்திரை பதித்த பிராண்டான ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் உற்பத்தில் கடந்த சில மாதங்காளகவே மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் காத்திருப்பு காலம் 5 மாதங்கள் வரை நீள்கின்றது.

தற்பொழுது மாதம் 37,500 மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.  ஆண்டிற்க்கு மொத்தம் 4.5 லட்சம் பைக்குகள் உற்பத்தி ஆகின்றது. தனது ஆலைக்கு அருகாமையிலே சுமார் ரூ.70 கோடி மதிப்பில் மூன்றாவது தொழிற்சாலையை அமைக்க இடம் வாங்கியுள்ளது.

வரும் டிசம்பர் 2015 முதல் மாதத்திற்க்கு  52,000 முதல் 55,000 பைக்குகள் தயாரிக்க உள்ளதால் ஆண்டிற்க்கு 6.25 லட்சம் பைக்குகள் விற்பனை செய்ய இயலும்.

மேலும் வாசிக்க ; ராயல் என்ஃபீலடு ஸ்பெஷல் எடிசன்

உள்நாட்டில் மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் அமோக விற்பனை வளர்ச்சியை ராயல் என்ஃபீல்டு  பதிவு செய்துவருகின்றது. இந்த ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 85 சேவை மையங்களை திறக்க உள்ளனர்.

Royal Enfield plans To Increase Production

Exit mobile version