Automobile Tamil

விற்பனையில் டாப் 10 கார்கள் – 2015-2016

கடந்த 2015-2016 ஆம் நிதி ஆண்டில் இந்தியளவில் அதிகப்படியாக விற்பனையான டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம். வழக்கம்போல மாருதி சுஸூகி நிறுவனம் 10யில் 6 இடங்களை கைப்பற்றியுள்ளது.

honda-city

10.ஹோண்டா சிட்டி

இந்திய வாடிக்கையாளர்களின் மிக விருப்பமான செடான் காராக வலம் வருகின்ற சிட்டி கார் கடந்த 2015-2016 ஆம் நிதி ஆண்டில் 77,548 கார்களை விற்பனை செய்துள்ளது. சிட்டி காரில் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கின்றது.

 

9. மாருதி ஆம்னி

தொடர்ந்து பல வருடங்களாக எந்த மாற்றங்களும் கானாத நிலையிலும் சிறப்பான வரவேற்பினை பெற்று தொடர்ச்சியாக முதல் 10 இடங்களில் இடம்பிடிப்பதனை வழக்கமாக கொண்டுள்ள மாருதி ஆம்னி கடந்த நிதி ஆண்டில் 79,949 மினிவேன்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸூகி ஆம்னி வேனில் 3 சிலிண்டர்களை கொண்ட 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

8. மஹிந்திரா பொலிரோ

முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே எஸ்யூவி காராக விளங்கும் பொலிரோ எஸ்யூவி கடந்த 10 ஆண்டுகளாக முதன்மையான எஸ்யூவி காராக வலம் வருகின்றது. 62 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 175 Nm ஆகும். 15-16 ஆம் நிதி ஆண்டில் 81,559 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

7. மாருதி செலிரியோ

இந்தியாவின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலாக வந்த மாருதி செலிரியோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் உள்ளது. 15-16 ஆம் நிதி ஆண்டில் 87,428 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

6. ஹூண்டாய் எலைட் ஐ20

முதன்முறையாக ஆண்டு விற்பனையில் எலைட் ஐ20 கார் 1 லட்சத்தினை தாண்டியுள்ளது. இந்தியளவில் இரண்டாமிடத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தினை எலைட் ஐ20 1,04,841 கார்களை விற்பனை செய்து 6வது இடத்தினை பிடித்துள்ளது.

5. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

பிரசத்தி பெற்ற கிராண்ட் ஐ10 கார் 2015-2016 ஆம் நிதிஆண்டில் 1,26,181 கார்களை விற்பனை செய்துள்ளது. ஐ10 காருக்கு மாற்றாக வந்த கிராண்ட் ஐ 10 நல்ல வரவேற்பினை பெற்ற மாடலாகும்.

4. மாருதி வேகன்ஆர்

டால்பாய் ஹேட்ச்பேக் என அழைக்கப்படும் மாருதி சுஸூகி வேகன் ஆர் கார் 15-16 ஆம் நிதி வருடத்தில் 1,69,555 கார்களை விற்பனை செய்துள்ளது.

3. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 50 லட்சம் கார்கள் என்ற இலக்கினை கடந்த ஸ்விஃப்ட் கார் கடந்த நிதி வருடத்தில் 1,95,043 கார்களை விற்பனை செய்துள்ளது.

 

2. மாருதி டிசையர்

இந்திய வரலாற்றிலே அதிகம் விற்பனையான செடான் காராக வலம் வரும் டிசையர் கார் கடந்த நிதி ஆண்டில் 2,34,242 கார்களை  விற்பனை செய்துள்ளது.

1. மாருதி ஆல்ட்டோ

இந்தியாவின் ஆஸ்தான காராக விளங்கும் ஆல்ட்டோ கார் கடந்த நிதி ஆண்டில் 2,63,422 கார்களை விற்பனை செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனுடன் கிடைக்கின்றது.

Exit mobile version