Auto Industry

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூலை 2016

கடந்த ஜூலை 2016 , மாதந்திர விற்பனையில் முன்னனி வகிக்கும் டாப் 10 ஸ்கூட்டர் பற்றி தெரிந்துகொள்வோம். டாப் 10 இடங்களில் முதன்முறையாக ஹோண்டா நவி 10வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் நெ.1 ஸ்கூட்டராக தொடர்ச்சியாக இருந்து வரும் ஹோண்டா ஆக்டிவா கடந்த மாத விற்பனையில் 2,56,173 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 46, 557 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது.

ஹோண்டா நவி மோட்டோஸகூட்டர் மாடல் பல தரப்பட்ட மெட்ரோ மக்களிடம்நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் 11,644 அலகுகள் விற்பனை ஆகி முதன்முறையாக முதல் 10 இடங்கள் பட்டியலில் நுழைந்து 10வது இடத்தை பெற்றுள்ளது.

ஹீரோ டூயட் , மேஸ்ட்ரோ , பிளஸர் போன்ற மாடல்கள் தொடர்ச்சியாக சீரான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. யமஹா பேசினோ ஸ்கூட்டர் 18,162 அலகுகள் விற்பனை ஆகி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

முழுமையான பட்டியலை கான கீழுள்ள அட்டவனையில் பார்க்கலாம்.

டாப் 10 ஸ்கூட்டர் ஜூலை 2016

வ.எண் மாடல் விபரம் ஜூலை 2016
1. ஹோண்டா ஆக்டிவா 2,56,173
2. டிவிஎஸ் ஜூபிடர் 46,557
3. ஹோண்டா டியோ 32,388
4. ஹீரோ மேஸ்ட்ரோ 31,311
5. ஹீரோ டூயட் 24,391
6. யமஹா பேசினோ 18,162
7. ஹீரோ பிளஸர் 15,738
8. யமஹா ரே 14,080
9. சுசூகி ஆக்செஸ் 13,120
10. ஹோண்டா நவி 11,644

Share
Published by
MR.Durai