Automobile Tamilan

மாருதி செலிரியோ விற்பனை 1 லட்சம் கார்களை கடந்தது

இந்தியாவின் முதல் ஏஎம்டி மாருதி சுசூகி செலிரியோ கார் கடந்த பிப்ரவரி 2014ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது. கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் டீசல் மாடலாக செலிரியோ வந்தது.
81257 maruti2bcelerio2b252822529

ஆட்டோ கியர் ஷிப்ட் கொண்ட முதல் மாடலாக வந்த செலிரியோ பெட்ரோல் மாடல் நல்ல வரவேற்பினை பெற்று ஒவ்வொரு மாதமும் அதிக விற்பனையாகும் முதல் 10 கார்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதுபற்றி மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாகி RS.கல்சி கூறுகையில்  இந்தியாவில் முதல் ஆட்டோ கியர் ஷிப்ட் காராக அறிமுகம் செய்யப்பட்ட செலிரியோ மூன்றில் ஒன்று ஆட்டோ கியர் ஷிப்ட் மாடல் விற்பனை ஆகின்றது. மாருதி சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களின் சந்தை மதிப்பு 61 சதவீதத்தில் இருந்து 71 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

செலிரியோ பெட்ரோல் , சிஎன்ஜி மற்றும் டீசல் என மூன்று ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

Maruti Suzuki Celerio crosses 1 lakh sales mark

Exit mobile version