Site icon Automobile Tamilan

ஸ்விஃப்ட் காரை வீழ்த்திய கிராண்ட் ஐ10

இந்தியாவின் பிரபலமான மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனையை விட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 960 கார்கள் கூடுதலாக விற்பனை செய்து ஸ்விஃப்ட் காரை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் ஸ்விஃப்ட் காரின் விற்பனை பெரிதாக சரிந்துள்ளது.

கடந்த நவம்பர் 2014ம் ஆண்டில் 17900 கார்களை ஸ்விஃப்ட் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த நவம்பர் 2015யில் 11,859 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் 17669 கார்களை விற்பனை செய்திருந்தது.

கிராண்ட் ஐ10 காரின் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் 14,079 கார்களை விற்பனைசெய்திருந்தது. ஆனால் நவம்பரில் 12899 கார்களை மட்டுமே விற்றுள்ளது.  ஓட்டுமொத்தமாக பார்த்தால் அனைத்து கார் மாடல்களின் விற்பனையும் சரிந்தே உள்ளது.

இளம் வாடிக்கையாளர்கள் மற்றும் நடுத்தர மக்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் இரண்டு கார்களுமே சிறந்ததாகும். மாருதி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சரிய முக்கிய காரணம் பலேனோ காராக கூட இருக்கலாம். தற்பொழுது பலேனோ காரின் விற்பனை சிறப்பாக உள்ளது. கிராண்ட் ஐ10 விற்பனை வளர்ச்சி அடையாமலே ஸ்விஃப்ட் விற்பனை சரிந்துள்ளதால் பலேனோ காரின் ஆதிக்கமே காரணமாகும.

Exit mobile version