Automobile Tamilan

சென்னையில் ஏத்தர் கிரீட் சார்ஜிங் நிலையங்களை துவங்கும் ஏத்தர் எனெர்ஜி

9e6cc athergrid charging point

பெங்களூவை தொடர்ந்து சென்னையில் சார்ஜிங் பாயின்ட்களை ஏத்தர் கிரீட் என்ற பெயரில் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் துவங்க திட்டமிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 6500 சார்ஜிங் நிலையங்களை இந்நிறுவனம் நிறுவ முடிவெடுத்துள்ளது.

ஏத்தர் எனெர்ஜியில் ஃபிளிப்கார்ட், டைகர் குளோபல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய டூ வீலர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. பெங்களூருவில் தனது ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் ஏத்தர் 24 இடங்களில் சார்ஜிங் நிலையங்களையும் 7 இடங்களில் சென்னையிலும் கொண்டுள்ளது.

ஏத்தர் கிரீட்

எத்தர் கிரீட் தொடங்கப்படுவதற்கான சிறப்பு சலுகையாக முதல் வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக அனைத்து மின்சார வாகனங்களையும், அதாவது ஏத்தர் ஸ்கூட்டர் மட்டுமல்ல, மற்ற நிறுவன இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏத்தர் கிரிட் (Ather Grid) என்ற பிரத்தியேக செயலியை அறிமுகம் செயதுள்ள இந்நிறுவனம், இந்த செயலி வாயிலாக சார்ஜிங் நிலைய இருப்பிடத்தை அறிய பேட்டரி இருப்பு மற்றும் பேமென்ட் சார்ந்த அம்சங்களை பெறலாம்.

சென்னையில் ஜூன் மாதம் முதல் இந்நிறுவன ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிறுவனத்தில் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 5kW BLDC (brushless direct current) எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், இந்த ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் தேவைப்படும்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

தற்போது இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் சென்னை வாடிக்கையாளர்களுக்கு ப்ரீ புக்கிங் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏத்தர் 340 மின்சார ஸ்கூட்டர் விலை ரூ. 1.13 லட்சம்

ஏத்தர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1.28 லட்சம்

(ஆன் ரோடு பெங்களூரு)

Exit mobile version