Automobile Tamilan

ஏதெர் ப்ரோ இப்பொழுது ஏதெர்ஸ்டேக் ப்ரோ என மாற்றம்.!

ather rizta charging

ஏதெர் எனர்ஜியின் பிரத்தியேகமான ஏதெர் ப்ரோ பேக் மூலம் பல்வேறு மேம்பாடான வசதிகளை பெறுவதுடன் மென்பொருள் சார்ந்த பலவற்றை வழங்கி வரும் நிலையில் இதன் பெயரை தற்பொழுது ஏதெர்ஸ்டேக் ப்ரோ (AtherStack Pro) என மாற்றப்பட்டுள்ளது.

புதுப்பிப்பு அம்சங்கள், விலை நிர்ணயம் அல்லது பிற பயனர் நன்மைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை, ஆனால் நிறுவனம் அதன் தொழில்நுட்ப அடையாளத்தை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் முழுவதும் எவ்வாறு தொடர்பு கொள்ள விரும்புகிறது என்பதில் ஒரு மாற்றமாகும்.

ஏதெர்ஸ்டாக் ப்ரோ முன்பு போலவே அதே அம்சங்களை தொடர்ந்து வழங்குகிறது. இதில் ஸ்கிட் கண்ட்ரோல், ஃபால்சேஃப், தெஃப்ட் மற்றும் டோ அலர்ட்ஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நேரடி இருப்பிட கண்காணிப்பு ஆகியவை அடங்கும். ஆட்டோஹோல்ட் மற்றும் மேஜிக் ட்விஸ்ட் போன்ற பிற வசதிகள் ஸ்டாப்-கோ அசிஸ்ட் உள்ளது.

இந்நிறுவனத்தின் சமீபத்திய குறிப்பிடதக்க சாதனைகளில் ஒன்றாக மகாராஷ்டிரா முழுவதும் 400 ஏதெர் கிரிட் வேகமான சார்ஜிங் மையங்களை கடந்துள்ளது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் ரேஞ்ச் தொடர்பான சிக்கல்களை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்வதனை தடுக்கும்.

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஏதெரின் கம்யூனிட்டி தினம் நடைபெற உள்ளதால் அன்றைக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர், விரைவு சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பெற்று புதிய ஏதெர்ஸ்டேக் 7.0 மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள், BAAS பற்றி தகவல் வெளியாகலாம்.

Exit mobile version