Automobile Tamilan

அமோக ஆதரவுடன் 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஏதெர் ரிஸ்டா

ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டர்

பிரபலமான மின்சார இரு சக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏதெர் எனர்ஜி தொடர்ந்து சீரான விற்பனை மற்றும் வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு வருடங்கள் கூட நிறைவடையாத புதிய ரிஸ்டா குடும்பங்களுக்கான ஸ்கூட்டரை பொறுத்தவரை ஒரு லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளது.

அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கடந்த 12 மாதங்களாக 60% சந்தை பங்களிப்பை ரிஸ்டா மூலம் இந்நிறுவனம் ஆனது பெற்று வருவது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

ஏதர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் போகேலா கூறுகையில், “ரிஸ்டா இந்திய குடும்பங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு கூடுதலான இடவசதி, பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை பெற்றுள்ளதால், 1 லட்சம் விற்பனையை இவ்வளவு விரைவாகக் கடந்தது, பெட்ரோல் ஸ்கூட்டர்களிலிருந்து வாடிக்கையாளர்கள் மாறுவதில் நாங்கள் சரியான பாதையில் உள்ளோம் என்பதை நிரூபிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

ரிஸ்டா ஸ்கூட்டரில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு பேட்டரி ஆப்ஷனை முறையே  முழுமையான சார்ஜில் 123 கிமீ மற்றும் 159 கிமீ வெளிப்படுத்துகின்ற நிலையில் விலை ரூ.1.13 லட்சம் முதல் ரூ.1.48 லட்சம் வரை கிடைக்கின்றது.

Exit mobile version