Automobile Tamilan

பிரேசிலில் பஜாஜ் ஆட்டோ தொழிற்சாலை உற்பத்தி துவக்கம்

bajaj dominar 400 launch soon

பிரேசில் நாட்டில் முதன்முறையாக இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ களமிறங்கியுள்ள நிலையில் ஆண்டுக்கு சுமார் 20,000 இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த பிரேசில் தொழிற்சாலையில் டாமினார் வரிசை பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பல்சர் 200 மற்றும் 160 என இரு மாடல்களும் டாமினார் பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது.

9,600 சதுர மீட்டர் பரப்பளவில் என்ஜின் அசெம்பிளி மற்றும் வாகன அசெம்பிளி லைன் மற்றும் சோதனை வசதி உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளதாக பஜாஜ் கூறுகிறது. முதற்கட்டமாக உற்பத்தி திறன் ஒற்றை ஷிப்ட் அடிப்படையில் 20,000 யூனிட்டுகளாக இருக்கும், இருப்பினும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இதை ஆண்டுக்கு 50,000 யூனிட்கள் வரை விரிவாக்கும் திட்டங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

100க்கு மேற்பட்ட நாடுகளில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. மேலும், உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை ஜூலை 5 ஆம் தேதி வெளியிட உள்ளது.

இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் பிரேசில் சந்தையில் தனது தொழிற்சாலையை துவங்க ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version