Automobile Tamilan

ஃப்ளிப்கார்டில் பஜாஜ் பைக்குகள் விற்பனை துவங்கியது

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான ப்ளிப்கார்ட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 25 முன்னணி நகரங்களில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் வரிசையில் 12 பைக்குகள், டோமினார், அவெஞ்சர், சிடி வரிசை, பிளாட்டினா மற்றும் freedom 125 சிஎன்ஜி பைக் ஆகிய வெற்றி விற்பனை செய்து வருகின்றது.

2024 bajaj pulsar 150

பஜாஜ் பைக் தயாரிப்பாளர், அதன் ஆன்லைன் மூலம் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், அதன் சாத்தியமான வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அதன் தயாரிப்புகளை வாங்குவதை எளிதாக்குகிறது. ஆன்லைன் விற்பனையை அதிக அளவில் தொடங்க, பஜாஜ் நிறுவனம் ரூ. 5,000 உடனடி ரொக்க தள்ளுபடி, 12 மாத கட்டணமில்லா EMI மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு பிற கார்டு சலுகைகள் அறிவித்துள்ளது.

 

Exit mobile version