2019 ஆம் நிதியாண்டில் விற்பனையில் முதன்மையான 10 கார்கள்

maruti wagon r

கடந்த 2019-2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனை நிலவரப்படி முதன்மையான 10 கார்கள் பற்றிய செய்தி தொகுப்பில் இடம்பிடித்துள்ள கார்களினை அறிந்து கொள்ளலாம்.

முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசூக்கி நிறுவனமும், மற்ற மூன்று இடங்களை ஹூண்டாய் இந்தியா நிறுவனமும் பெற்றுள்ளது. முதலிடத்தில் உள்ள ஆல்ட்டோ காரின் விற்பனை எண்ணிக்கை 2,59,401 ஆகும்.

முதன்மையான 10 கார்கள் – FY19

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூக்கி இந்தியா நிறுவனம், கடந்த  2018-2019 ஆம் நிதியாண்டில் சுமார் 17 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பயணிகள் வாகன கார் சந்தையில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான பங்களிப்பினை மாருதி பெற்று விளங்குகின்றது.

இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக ஹூண்டாய் மோட்டார் இந்தியா விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் கிரெட்டா, கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 போன்ற மாடல்கள் மிக முக்கியமானதாகும்.

கடந்த நிதியாண்டில் தொடர்ந்து மாருதியின் ஆல்ட்டோ கார் முதலிடத்தை பெற்ற விற்பனை எண்ணிக்கை 2,59,401 ஆக பதிவு செய்துள்ளது. அதே போல அடுத்த இடத்தில் உள்ள மாருதி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட மிக வேகமாக அதிகரித்து 2,53,859 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

எஸ்யூவி ரக வாகனங்களில் மாருதி விட்டாரா மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மாடல்கள் மட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

விற்பனையில் டாப் 10 கார்கள் – 2018-2019 ஆம் நிதி ஆண்டு

தயாரிப்பாளர்/மாடல் FY19 FY18
மாருதி ஆல்ட்டோ 259401 258539
மாருதி டிசையர் 253859 196990
மாருதி ஸ்விஃப்ட் 223924 175928
மாருதி பலேனோ 212330 190480
மாருதி பிரெஸ்ஸா 157880 148462
மாருதி வேகன்ஆர் 151462 168644
ஹூண்டாய் எலைட் i20 140225 136182
கிராண்ட் i10 138053 (Automobile Tamilan) 151113
ஹூண்டாய் க்ரெட்டா 124300 107136
மாருதி செலிரியோ 103734 94721

Exit mobile version