Automobile Tamilan

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய சிறந்த 10 கார்கள் – FY24-25

best selling Maruti Suzuki wagonr no 1 car

2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சிறந்த 10 கார்களில் மாருதி சுசூகி வேகன் ஆர் முதலிடத்தில் 1,98,451 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி 1,96,572 ஆக பதிவு செய்துள்ளது.

குறிப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள மாடல்களில் டாப் 10ல் 4 மாடல்கள் எஸ்யூவி ஆக உள்ளன. அவை பஞ்ச், கிரெட்டா, பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்பியோ உள்ளன. டாப் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி வசம் உள்ளது.

Top 10 Selling Cars FY24-25

Top 10 Cars FY 2024-2025 Units
1. மாருதி சுசூகி வேகன் ஆர் 1,98,451
2. டாடா பஞ்ச் 1,96,572
3. ஹூண்டாய் க்ரெட்டா 1,94,871
4. மாருதி சுசூகி எர்டிகா 1,90,974
5. மாருதி சுசூகி பிரெஸ்ஸா 1,89,163
6. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 1,79,641
7. மாருதி சுசூகி பலேனோ 1,67,161
8. மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் 1,66,216
9. மாருதி சுசூகி டிசையர் 1,65,021
10. மஹிந்திரா ஸ்கார்பியோ 1,64,842

 

Exit mobile version